Blogs

Friday, 22 July 2022 12:58 PM , by: Elavarse Sivakumar

சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என ரயில்வே அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மூத்தக் குடிமக்களுக்கு ரயில்களில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் சலுகைகள் வழங்கப்படுமா என முதியோர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சீனியர் சிட்டிசன் சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சலுகைகள்

சீனியர் சிட்டிசன்களுக்கென ரயில்வே துறையில் 53 வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ரயில்வே வழங்கும் மொத்த சலுகைகளில் 80% சலுகைகள் சீனியர் சிட்டிசன்களுக்கே வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படுகின்றன.

பெண்களுக்கு சலுகைகள்

மூத்தக் குடிமக்களில் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கப்பட்டது. ரயிலில் எல்லா வகுப்பு டிக்கெட்டுகளுக்கும் இச்சலுகை கிடைக்கும்.சீனியர் சிட்டிசன்களில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு டிக்கெட் கட்டணத்தில் 40% தள்ளுபடி வழங்கப்பட்டது.

கொண்டுபோன கொரோனா

கொரோனா பாதிப்பு தொடங்கியபோது 2020 மார்ச் மாதம் முதல் சீனியர் சிட்டிசன்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இனி ​சலுகைகள் கிடையாது

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்களில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்படுமா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சீனியர் சீட்டிசன்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

குறைவான கட்டணம்

ஏற்கெனவே ரயில் டிக்கெட் கட்டணம் குறைவாக இருப்பதாலும், சலுகைகளாலும் ரயில்வேக்கு நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், சீனியர் சிட்டிசன்கள் உள்பட அனைத்து பயணிகளின் சராசரி பயணச் செலவில் 50 சதவிகிதத்தை ரயில்வே ஏற்று வருகிறது எனவும் கூறினார்.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)