1. செய்திகள்

சென்னை to மாமல்லபுரம்- இலவச பேருந்து சேவை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chennai to Mamallapuram- Free Bus Service!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்து சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த இலவசப் பேருந்துகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது. வருகிற 25-ந்தேதி முதல் 5 பேருந்துகள் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பது வரலாற்றுக்குரிய நிகழ்வாகும். இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்திட தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

பிரம்மாண்டப் போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது.

25ம் தேதி முதல்

வரும் 25-ந்தேதி முதல் 5 பஸ்கள் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்லும். 1 மணி நேரத்துக்கு ஒரு தடவை இலவச பேருந்துகளின் சேவை இருக்கும். சென்னை மத்திய கைலாஷில் இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படும்.
இவை ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும். இந்த பேருந்துகள்எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்ளிட்ட 19 இடங்களில் நின்று செல்லும்.

ஆக.10 வரை

இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, 'செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பலர் மாமல்லபுரம் வருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக இலவச பேருந்துகள் இயக்கப்படுகிறது. போட்டி முடியும் வரை இந்த பேருந்து சேவை இருக்கும் என்றார்.

மேலும் படிக்க...

மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!

ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!

English Summary: Chennai to Mamallapuram- Free Bus Service! Published on: 22 July 2022, 10:17 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.