தமிழகத்தில் வரும் 13ம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குக் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வரும் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க மாணவர்களிடம் இருந்து பள்ளி கட்டணம் பெறுவது அவசியம் என்று கூறப்படுகிறது.
ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம்
மேலும் மத்திய அரசும் விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கான, வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் காரணத்தினால் இந்த வருடம் எப்போது பள்ளி கல்லூரிகள் தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதனை புரிந்து கொண்டு கல்வி நிறுவனங்களும், மத்திய அரசும், ஆன்லைன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஜூலை 13- ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிராமப்புற மாணவர்கள் நிலை
அதிகப்படியாக ஏழை மாணவர்கள் தான் பெரும்பாலும் அரசு பள்ளிகளுல் படித்து வருகின்றனர். இவர்களின் பெற்றோரர்கள் அதிகம் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பு இல்லை, இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த முடிவு எந்த அளவுக்கு வெற்றியடையும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க...
பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!
குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி