1. செய்திகள்

பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!

Daisy Rose Mary
Daisy Rose Mary
பயிர் காப்பீடு

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் விவசாயிகளுக்கு 68.91கோடி ரூபாய் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் காட்பீடில் தமிழகம் முதலிடம் (Tamil Nadu tops in crop insurance)

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்த குறிப்பில், தேசிய அளவில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இத்திட்டம் துவங்கிய 2016-2017ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை ரூபாய் 8155.33 கோடி இழப்பீட்டுத் தொகையானது சுமார் 40.84 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுள் 70 சதவீத விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

அரசாணை  (Government Order)

பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேலும் பயன்பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் காரீப்-2020 பருவத்திற்கான மாவட்டங்கள், பயிர்கள் மற்றும் வருவாய் கிராமங்களை அறிவிக்கை செய்து ஜுன் 1ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.

இதன்படி கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல், காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயறுவகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களையும் காப்பீடு செய்வதற்கு மாவட்ட வாரியாக காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர்.

ஜூலை 31ம் தேதி கடைசி நாள் (Delta District Farmers must join by July 31st)

டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை நடப்பாண்டில், மேட்டூர் அணையானது ஜுன் 12ஆம் தேதி அன்று பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளதால், குறுவை நெல் சாகுபடி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிரை காப்பீடு செய்வதற்கு, ஜுலை 31ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் இதர மாவட்டங்களில் காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் மற்றும் இதரப் பயிர்களை காப்பீடு செய்வதற்கு கடைசி தேதி மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே காப்பீடு செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

காப்பீடு விதிமுறைகள் (Insurance terms)

  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ பயிர்க்கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து காப்பீட்டுக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

  • வங்கிகளில் கடன் பெற்று, இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பமில்லாத விவசாயிகள், நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே, விருப்பமில்லா மனுவினை கடன் பெறும் வங்கியில் அளிக்கலாம்.

  • வங்கிகளில் கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது வங்கிகளிலோ நடப்பு ஆண்டுக்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், முன்மொழிவு படிவம் போன்ற ஆவணங்களை தந்து, தங்கள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும், இது குறித்தான கூடுதல் விபரங்களை உங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலைத்துறை அலுவலர்களையோ அல்லது வங்கிகளையோ அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு ரூ68.91 கோடி இழப்பீடு (68.91 crore farmers were compensated last year)

கடந்த 2019ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் இத்திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட 9,281 விவசாயிகளுக்கு இதுவரை, 13.69 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 55.22 கோடி ரூபாய் இந்திய வேளாண் காப்பீட்டு கழகத்தால் 75,764 விவசாயிகளுக்கு 06.07.2020 அன்று ஒப்பளிப்பு செய்யப்பட்டு, இவ்வார இறுதிக்குள் இத்தொகையினை முழுவதையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விடுவிப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆக மொத்தம், சென்ற ஆண்டில் காரிப் பருவத்தில் பதிவு செய்துள்ள 85,045 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 68.91 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அழைப்பு (Call for Farmers)

எதிர்பாராத இயற்கைச்சீற்றங்களால் பயிர்கள் பாதிப்படைந்தால், திட்ட விதிமுறைகளின்படி, பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பதால், 2020 காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களை உரிய காலத்திற்குள் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும்

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! 

 

English Summary: Tamil Nadu government has appealed to farmers to insure their crops Under PMFBY Scheme

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.