மத்திய அரசின் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வு காலம் (Leisure time)
ஓய்வு என்பதே நிம்மதியானதாக இருக்க வேண்டும். பிறரை நம்பியோ, மற்றவர்களைச் சார்ந்தோ இருக்கும் நிலையில், கையில் வருமானமும் இல்லை என்றால், ஓய்வு காலம், கொடுமையான காலமாக மாறிவிடும்.
சேமிப்பது அவசியம் (Saving is essential)
அதற்கு இப்போது இந்தே சம்பாதிப்பது மட்டுமல்லாமல், சேமித்து வைப்பதும் அவசியமானதாகும். அப்போதுதான் நம்முடையக் கடைசிக்காலம் என்பது கஷ்டகாலமாக மாறாது.
நிதிச்சுமை இல்லை (No financial burden)
ஆக ஓய்வுகாலத்தை நிம்மதியாக, நிதிச்சுமை இல்லாமல் கழிக்கத் திட்டமிடுபவரா நீங்கள்?அப்படியானால் இந்தத் திட்டம் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
மாதந்தோறும் ஓய்வூதியம் (Monthly pension
ஓய்வூதியம் என்ற பெயரில் நிலையான ஒருத் தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வந்துகொண்டிருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட்ட நிறைய திட்டங்கள் இப்போது செயல்பாட்டில் இருக்கின்றன. மத்திய அரசே இதுபோன்ற பல திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
புதிய திட்டம் (New project)
அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா (pradhan mantri shram yogi mandhan yojana). இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் சேமித்தாலேப் போதும். கடைசிக் காலத்தில் மாதம்தோறும் 3,000 ரூபாய் ஓய்வூதியமாக உங்களைத் தேடி வரும்.
தகுதி (Qualification)
அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கிறது.
18 முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to apply?
அரசு பொதுச் சேவை மையங்களிலேயே இத்திட்டத்தை நீங்கள் கணக்கு தொடங்க முடியும்.
ஆவணங்கள் (Documents)
-
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
-
கணக்குத் தொடங்கியப் பின்னர் கார்டு ஒன்றும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் சேமிக்கலாம்.
மாதம் ரூ.55 (Rs.55 per month)
60 வயதைக் கடந்தவுடன் உங்களுக்கு ஓய்வூதியம் வரத்தொடங்கும். மாதத்துக்கு 55 ரூபாய் சேமிப்பதாக இருந்தால் நீங்கள் 42 வருடங்களுக்கு இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.36,000 (Rs.36,000 per year)
இதன்படி உங்களது முதலீட்டுப் பணம் ரூ.27,720 ஆக இருக்கும். நீங்கள் விரும்பினால் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு, வருடாந்திர ஓய்வூதியமாக ரூ.36,000 த்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!