புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு நினைவு தபால் தலை மற்றும் Rs.75 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
இந்தியாவின் ஐனநாயக மாண்பை நிலைநாட்டும் இடமாக திகழ்வது நாடாளுமன்றம். இந்நிலையில் Central Vista திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் லோக்சபா அறையில் நடந்த துவக்க விழாவில், சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் வெளியிட்டார். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் அரசிதழின் படி, நாணயத்தின் எடை 34.65-35.35 கிராம் இருக்கும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் "பாரத்" மற்றும் ஆங்கிலத்தில் "இந்தியா" என்ற வார்த்தையின் நடுவில் அசோகா தூணின் கீழ் Rs.75 என்றும் இடம் பெற்றுள்ளது.
Rs.75 நாணயத்தின் மற்றொரு பக்கத்தில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படமும், மேலே இந்தியில் பாராளுமன்ற வளாகம் மற்றும் கீழே எழுதப்பட்டிருக்கும். இது மட்டுமின்றி, பார்லிமென்ட் படத்திற்கு கீழே 2023 ஆம் ஆண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
புதிய பாராளுமன்றத்தின் சிறப்பம்சம் என்ன?
இந்தியாவின் தலைநகரான டெல்லியின் மையத்தில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு மாடிகள் உயரம் கொண்ட வகையில் கட்டப்பட்டுள்ளது புதிய நாடாளுமன்றம். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் லட்சியமான Central Vista திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
Central Vista திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தினை கட்டுவதற்கு 26,045 மெட்ரிக் டன் எஃகு, 63,807 மெட்ரிக் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
பழைய நாடாளுமன்ற கட்டிடத்துடன் ஒப்பீடுக்கையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பன்மடங்கு இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி பழைய நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் 552 இருக்கைகள் இருந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் 888 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் பழைய ராஜ்யசபாவில் 245 எம்.பிக்கள் அமரும் வகையில் இருந்த நிலையில் தற்போது 384 எம்.பிக்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
புதிய லோக்சபாவின் வடிவமைப்பானது, பழைய லோக்சபாவை விட தோராயமாக மூன்று மடங்கு பெரியது. மேலும் புதிய லோக்சபாவானது இந்தியாவின் தேசிய பறவையான மயிலினை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் புதிய இராஜ்யசபாவானது இந்தியாவின் தேசிய மலரான தாமரையினை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை ( sengol) பிரதமர் நரேந்திர மோடி இன்று வைத்தார்.
மேலும் காண்க:
DA Hike: அரசு ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்