தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் 9 சிறு சேமிப்புத் திட்டங்கள் மிக முக்கியமானவை. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்குமான சேமிப்புத் திட்டங்கள் இதில் அடங்கும். எனவே உங்களுக்கு ஏற்ற திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தைப் பெறலாம். புத்தாண்டில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய வட்டி என்று என்று பார்த்து முதலீடு செய்யலாம். சிறு சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம். இத்திட்டம் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த ஒரு வழியாக உள்ளது. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் உள்ளன.
அஞ்சல் அலுவலக சேமிப்பு (Post Office Savings)
ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையைச் சேமித்து நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய லாபத்தை ஈட்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். தற்போதைய நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்துக்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பின்னர் உங்களது சேமிப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிடலாம். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி
பிபிஎஃப் திட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்கினால் திட்டத்தின் முதிர்வு காலத்தில் பெரிய தொகையை ஈட்ட முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்தில் நீங்கள் தினமும் 100 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் உங்களுடைய மொத்த முதலீடு ரூ.36,500. இப்படியே 15 ஆண்டுகளுக்கு சேமித்தால் 7.1 சதவீத வட்டியில் உங்களுக்கு மொத்தம் ரூ.9.89 லட்சம் கிடைக்கும். 25 ஆண்டு காலத்தில் உங்கள் ரிட்டைர்மெண்ட் பணமாக ரூ.25 லட்சம் கையில் இருக்கும். இதற்காக ரூ.9,12,500 டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.
குறுகிய காலத்தில் அதிக ரிட்டன் தரும் இத்திட்டம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேர் முதலீடு மற்றும் சேமிப்பின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க
EPFO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் இதோ!
பொங்கல் பரிசு ரூ.1000 பெற இது கட்டாயம்: ரேஷனில் ராகி விற்பனை: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!