1. மற்றவை

EPFO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

R. Balakrishnan
R. Balakrishnan
EPFO Pension

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொரு நபரும் தங்களின் ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இதனை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் குறித்து EPFO விவரித்துள்ளது. இதுகுறித்து குறித்து இப்பதிவில் காண்போம்.

ஆயுள் சான்றிதழ் (Life Certificate)

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் மாதந்தோறும் அரசு சார்பாக பென்ஷன் தொகை (ஓய்வூதியம்) வழங்கப்பட்டு வருகிறது. அதே போல தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு epfo அமைப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதனை பெற ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்.

அத்துடன் இந்த ஓய்வூதிய தொகையை மாதந்தோறும் தவறாமல் பெற ஆண்டுதோறும் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். தற்போது ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்

  • இதற்கு முதலில் 5 மெகாபிக்சல் கொண்ட கேமரா ஸ்மார்ட்போனை பயன்படுத்தவும்.
  • அடுத்தாக ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து AadharFaceRd பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
  • மேலும் https://jeevanpramaan.gov.in/package/download என்ற இணையப்பக்கத்தில் இருந்து ஜீவன் பிரமான் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • அதில் ஓய்வூதியதாரரின் விவரங்களை நிரப்பவும். ஃப்ரண்ட் கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும்.
  • மேற்கண்ட முறைகளை தவிர ஆதார் சாப்ட்வேர் மூலம் ஃபேஸ் ஆதென்டிகேஷன் டெக்னாலஜி மூலமாகவும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க

அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டம்: வட்டி விகிதம் உயர்வு!

சிறுவர் சேமிப்பு கணக்குத் திட்டத்தின் இத்தனை அம்சங்கள் உள்ளதா!

English Summary: Attention EPFO ​​Customers: Here's How to Submit Life Certificate! Published on: 05 January 2023, 08:33 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.