பல் துலக்கும் போது தவறி விழுந்ததில் வாயில் சிக்கிய Brushயை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய சம்பவம் நிகழ்ந்தது.
பல்லைத் தூய்மையாக வைத்துக்கொள்வதற்காக Brush உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். அதன்படி, காலையில், அனைவருமே Brushயைப் பயன்படுத்தி பல் துலக்குவது வழக்கம். அவ்வாறுப் பல்லைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்ட Brush உங்களை அறுவை சிகிச்சை வரை அழைத்துச் சென்றால் எப்படி இருக்கும்? இதோ இவருக்கு அப்படி நடந்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி. இவர் கடந்த 3ம் தேதி காலை வழக்கம் போல் பல் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழ நேர்ந்தது. இதில் பல் தேய்க்கப் பயன்படுத்திய Brush ரேவதியின் ஒரு பக்க கன்னத்தை கிழித்து மறுபுறம் சென்றுள்ளது. இதில் பல் தேய்க்கும் Brush அவரது வாய் பகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்தது.
வீட்டில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் நிலைமையைக் கண்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் Brushயை அகற்ற முடிவு செய்தனர்.இதன்படி ரேவதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது வாயிலிருந்து Brushயை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இதை அடுத்து அவர் குணமான நிலையில் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பல் துலக்கும் போது பிரஸ் வாயில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு பாராட்டுகளை வாரிக்குவித்து வருகிறது.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்பு+Hot water- ஆச்சர்யப்படுத்தும் நன்மைகள்!