Blogs

Thursday, 20 January 2022 07:59 AM , by: Elavarse Sivakumar

உங்களைக் கோடீஸ்வரர் ஆக மாற்றக் கூடிய வல்லமை இந்த 1 ரூபாய்க்கு உள்ளது. எனவே நாங்கள் குறிப்பிடும் இந்த 1 ரூபாய் நாணயம் உங்களிடம் இருக்கிறதா எனத் தேடிப்பாருங்கள். Old is gold என்கிற நம் முன்னோர்களின் வார்த்தை, எந்த விஷயத்திற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்த விஷயத்திற்கு அட்டகாசமாகப் பொருந்தும்.


எதிர்பார்க்காத விலை (Unexpected price)

பழைய நாணயங்கள், அரிய நாணயங்களை சேகரிப்போருக்கு இதுவொரு பொற்காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில், பழைய அரிய நாணயங்கள் அதிர வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி வருகின்றன.

1 ரூபாய்க்கு  ரூ.10கோடி

 அந்த வரிசையில், மிகப்பழைய 1 ரூபாய் நாணயம் அண்மையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஒரே ஒரு 1 ரூபாய் நாணயம் 10 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது நாணய சேகரிப்பாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சிறப்பு அம்சம் (Special feature)

இந்த ஒரு ரூபாய் நாணயத்தில் சிறப்பு அம்சங்கள் என்னென்ன இருக்கிறது என்றால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற காலத்தில் 1885ஆம் ஆண்டில் வெளியானதுதான் இந்த ஸ்பெஷல் ஒரு ரூபாய் நாணயம்.

உங்களிடமும் 1885ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதை ஏலத்தின் மூலம் விற்பனை செய்து பெரிய தொகையை சம்பாதிக்கலாம்.

விற்பது எப்படி? (How to sale?)

  • உங்களிடம் இந்த ரூபாய் நோட்டுகளில் ஏதேனும் இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம்.

  • இந்த இணையதளத்தில் இந்த அரிய நோட்டுகள் வாங்குபவர்கள் அதிகத் தொகையைச் செலுத்தி வாங்கி வருகின்றனர்.

  • நோட்டுகளை விற்க, முதலில் உங்களை Quikr இல் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.

  • அதன் பிறகு, ரூபாய் நோட்டின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்ற வேண்டும்.

  • பின்னர், உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.

  • நீங்கள் வழங்கியத் தகவலை இணையதளம் சரிபார்க்கும்.

  • அதன் பிறகு, ரூபாய் நோட்டுகளை வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

மேலும் படிக்க...

ஒரு ரூபாய்க்கு ரூ.7 லட்சம்- விபரம் உள்ளே!

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அதிர்ஷ்டம்: லாட்டரியில் ஒரு கோடி பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)