1. Blogs

தினமும் முதலீடு 44 ரூபாய் மட்டுமே: இலட்சத்தில் சம்பாதிக்க எல்.ஐ.சி.யின் சூப்பர் பாலிசி!

R. Balakrishnan
R. Balakrishnan
LIC's Super Policy

கொரோனா பிரச்சினை வந்த பிறகு நிறையப் பேர் சேமிப்பு மற்றும் முதலீட்டில் (Investment) அதிகம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளத்தில் சிறு தொகையை எடுத்து வைத்தால் பிற்காலத்தில் அது பெரிய தொகையாக கையில் இருக்கும். இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC.) செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஜீவன் உமாங் பாலிசி திட்டம்.

ஜீவன் உமாங் பாலிசி திட்டம் (Jeevan Umang Policg Scheme)

பாலிசி வாங்குவதற்கான வயது வரம்பு 90 நாட்கள் முதல் 55 வருடங்கள் ஆகும். இத்திட்டத்தில் ஆயுள் காப்பீடு கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு பெரிய தொகை போனஸாக முதிர்வு காலத்தில் கிடைக்கும். முதிர்வு காலத்துக்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் ஒரு நிலையான தொகை உங்களது வங்கிக் கணக்கில் வந்துகொண்டே இருக்கும். பாலிசிதாரர் இறந்தபிறகு அவரது குடும்பத்தாருக்கோ அல்லது நாமினிக்கோ பாலிசி பணம் வழங்கப்படும்.

நீங்கள் இந்த பாலிசியில் மாதத்துக்கு ரூ.1,320 பிரீமியம் செலுத்தினால் 30 ஆண்டுகளில் ரூ.4.75 லட்சம் இருக்கும். அதாவது ஒரு ஆண்டுக்கு ரூ.15,840 மட்டுமே பிரீமியம் செலுத்துவீர்கள். 30 ஆண்டுகள் நிறைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ரூ.40,000 வந்துகொண்டே இருக்கும். 31 முதல் 100 ஆண்டுகள் வரை நீங்கள் இந்தப் பலனைப் பெற்றால் மொத்தம் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.27.60 லட்சம்.

காப்பீடு (Insurance)

வருவான வரி சட்டம் 80சி-யின் கீழ் இத்திட்டம் வரி விலக்கு பெறுவது கூடுதல் அம்சமாகும். இது சந்தை அபாங்களுக்கு உட்படாது என்பது குறிப்பிடத்தக்கது. எல்.ஐ.சி. ஜீவன் உமாங் பாலிசி திட்டத்தில் பயன்பெறுவதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் காப்பீடு (Insurance) செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

Made in Covai: நம்ம பட்ஜெட்டிற்கு கட்டுபடியாகும் விலையில் மின்சாரக் ஸ்கூட்டர்!

சேமிப்பை எளிதாக உயர்த்த 30 நாள் திட்டத்தை கடைபிடியுங்கள்!

English Summary: Daily investment is only 44 rupees: LIC's super policy to earn lakhs! Published on: 03 December 2021, 07:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.