ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள், இப்போது எஸ்பிஐ டெபிட் கார்டுகளுடன் விபத்திற்கான காப்பீட்டை பீரிமியம் இல்லாமல் பெறலாம். இதற்கு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ ரூபே பிளாட்டினம் அட்டைக்கு விண்ணப்பித்து, பிளாட்டினம் அட்டையை பெற வேண்டும். இந்த அட்டையை வாங்கினால் உங்களுக்கு ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு (Accident insurance) உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
விபத்துக் காப்பீடு
எஸ்பிஐ ரூபே பிளாட்டினம் அட்டை ஒரு சர்வதேச டெபிட் கார்டு ஆகும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது உங்களுக்கு ரிவார்ட்ஸ்ம் கிடைக்கும். எஸ்பிஐ ரூபே பிளாட்டினம் கார்டைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ. 2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டைப் பெறலாம். இந்த காப்பீட்டை பெற விபத்து நடந்த 45 நாட்களுக்கு முன்னர் குறைந்தபட்சம் எதேனும் ஒரு ஆன்லைன் பரிவர்த்தனை (Online Transaction) செய்திருக்க வேண்டும். அவை பாயிண்ட் ஆஃப் சேல் மூலமாகவோ, இ-காமர்ஸ் மூலமாகவோ நடைப்பெற்றிருக்கலாம். இதில் முக்கியமான சிறப்பு என்னவெனில் இந்த காப்பீட்டை பெற நீங்கள் எந்தவொரு பிரீமியமும் (No Premium) செலுத்த தேவையில்லை.
நன்மைகள்
- எஸ்பிஐ ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (SBI RUPAY Platinum Debit Card) மூலம் இந்தியா முழுவதும் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிக விற்பனை நிலையங்களிலும், உலக அளவில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வணிக நிலையங்களிலும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம்.
- இந்த கார்டு மூலம், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுக்கலாம்.
- இந்த கார்டு மூலம் திரைப்பட டிக்கெட்டுகள் புக் செய்யலாம். மேலும் உங்கள் மாதாந்திர பில் செலுத்துதல், பயண முன்பதிவு, ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
- இந்த கார்டு மூலம் கூடுதலாக விமான நிலைய லவுஞ்ச்ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த கார்டு மூலம், ரூ.200க்கு மேல் செலவழித்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஷாப்பிங், டைனிங் அவுட், பெட்ரோல் டீசல் நிரப்புதல், பயண முன்பதிவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்க்கு 2 எஸ்பிஐ ரிவார்ட்ஸ் புள்ளிகளை பெறலாம். இந்த ரிவார்ட்ஸ் புள்ளிகள் நீங்கள் பின்னர் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் போது பயன்படும்.
- மேலும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் முதல் 3 பரிவர்த்தனைகளுக்கு 200 போனஸ் புள்ளிகளும் கிடைக்கும்.
- அதோடு உங்கள் பிறந்த நாளின் போது பிறந்த நாள் போனஸ் (Bonus) கிடைக்கும்.
- இவ்வளவு நன்மைகள் உள்ள இந்த அட்டையைப் பெற கட்டணமாக ரூ.300 மற்றும் ஜிஎஸ்டி (GST) செலுத்த வேண்டும். இந்த கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.200 மற்றும் ஜிஎஸ்டி ஆக உள்ளது. எனவே இந்த பிளாடினம் அட்டையைப் பெற்று பீரிமியம் இல்லா காப்பீட்டை பெற்றிடுங்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஒரு ரூபாய் நாணயத்துக்கு ரூ.10 கோடி கிடைக்கும்!
கணவன் மனைவி கூட்டாக சேமிக்க அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்! இருவருக்குமே மாத வருமானம்!