நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் அசம்பாவிதங்கள் நிலைகுறையவும் செய்துவிடுகின்றன. அந்த வகையில், 26 வயதான பள்ளி ஆசிரியை லிஃப்ட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எமனாக மாறிய லிஃப்ட்
மும்பை வடக்கு பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் ஜெனில் பெர்னாண்டஸ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று மதியம் 1 மணியளவில் உணவு இடைவேளைக்கு பின் ஆசிரியை இரண்டாவது மாடியில் உள்ள ஒய்வறைக்கு இறங்கி செல்வதற்காக ஆறாவது மாடியிலிருந்து லிஃப்டில் ஏறினார்.
தலையில் காயம்
6வது மாடியில் லிஃப்ட் உள்ளே சென்றது இரும்பு கேட்டை மூட முயன்றார். அப்போது அவர் வைத்திருந்த ஹேண்ட் பேக் லிப்ட் கதவின் இடுக்கில் சிக்கிக்கொண்டதும் லிப்ட் கீழ் நோக்கி இயங்கி துவங்கியது. இதில் நிலைகுலைந்த அவர் லிப்ட கதவில் சிக்கியதில் ஆசிரியைக்கு தலையில் காயம் ஏற்பட்டது
மாணவர்கள் சோகம்
இதில் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பல மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய இந்த ஆசிரியை, பள்ளியிலேயே அடிபட்டு உயிரிழந்த சம்பவம் மாணவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க...