பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதுமட்டுமா பாம்புகள், பழி வாங்கும் குணம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், நடந்திருக்கிறது ஒரு சம்பவம்.
அதாவது தனது ஜோடிப்பாம்பின் கொலைக்கு நியாயம் கேட்டுக் காவல் நிலையம் வரை பாம்பு வந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் வேண்டும்.விநோதமான இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம அசம்கரில் நிகழ்ந்துள்ளது.
ஜோடிப்பாம்புகள் (Pair snakes)
அங்குள்ள காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, புகார் அளிப்பவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பலரும் ஏதோ ஒரு காரணத்திற்காக புகார் அளிப்பதற்பாக வந்திருந்தனர். அப்போது அங்கு ஜோடி நாகப் பாம்புகள் சற்றுத் தொலைவில் இருந்தன.
காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த ஒருவர் வேகமாகக் காரில் கிளம்பியபோது, கார் பாம்பின் மீது ஏறியதில், அது அங்கேயே உயிரிழந்தது. வேகமாகச் சென்ற அந்தக் காரை மற்றொருப் பாம்பு துரத்திச் சென்றது. வேகமாகச் சென்ற காரை பாம்பு துரத்திக் கொண்டே சென்றுவிட்டது.
பாம்பு சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட சிலர், காவல் நிலையம் அருகே குழி தோண்டி புதைத்துவிட்டனர். மற்றொரு பாம்பு இனிமேல் இங்கு வராது என்று மக்கள் நினைத்தார்கள், ஆனால் தனது ஜோடி நாகம் புதைக்கப்பட்ட இடத்திற்கு மற்றொரு பாம்பு வந்துவிட்டது.அங்கு சிறிது நேரம் காத்திருந்த பிறகு, காவல் நிலையத்திற்குள் சென்ற அந்த பாம்பு, மறியல் செய்வதுபோல் அங்கு படமெடுத்து அமர்ந்துவிட்டது.
காட்டில் விடப்பட்டது (Left in the woods)
பாம்பைக் கண்டப் போலீசார், கைகால்கள் வெலவெலத்துப் போய் செய்வதறியாமல் நின்றனர். பாம்பு பிடிப்பவர்களை வரவழைக்கப்பட்டு, அந்தப் பாம்பைப் பிடித்துக் காட்டில் விட்டனர்.
மரணத்திற்குப் புகார் (Complaint for death)
நாகப்பாம்பு காவல் நிலையம் முன் சாலையில் அமர்ந்து மறியல் செய்ததைப் பார்த்த பொதுமக்கள், நாகப்பாம்பு தனது ஜோடியின் மரணத்திற்குப் புகார் அளிக்க வந்திருக்கிறது என்று சொல்லத் தொடங்கிவிட்டனர்.
மேலும் படிக்க...