Blogs

Wednesday, 18 November 2020 05:27 PM , by: Daisy Rose Mary

இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் பல்வேறு தொழில்துறை முடங்கியுள்ளது. பலதரப்பட்ட மக்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், பொருட்களை வாங்கி விற்கும் இ-காமர்ஸ் இணையதள நிறுவனமான அமேசானில் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெரும் 4 மணி நேரமே வேலை செய்து 70000 ரூபாய் வரை மாதம் வருமானம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் சுமார் 20,000 காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பகுதி நேரமாகவும், முழு நேர தொழிலாகவும் இதை மேற்கொள்ளலாம். வேலைக்கேற்ப ஊதியம் என்ற அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களு ஊரிலேயே பணி செய்ய வசதியாக அமேசான் நிறுவனம் டெலிவரி சேவைக்கு அதிக ஆட்களை பணியமர்த்தி வருகிறது. உள்ளூர் வாசிகள் பகுதிநேர தொழிலாகவும் இதை மேற்கொள்ளலாம். வேலையில் சேர நினைப்பவர்கள் அமேசான் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இப்போதே விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்க ; https://logistics.amazon.in/applynow . நாளொன்றுக்கு 100 முதல் 150 வரையிலான பார்சல்களை டெலிவரி செய்ய வேண்டும்.

பணியில் சேர தேவையானவை

  • பள்ளி (அ) கல்லூரி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • இருசக்கர வாகனம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • வாகனத்திற்கு தேவையான இன்சூரன்ஸ், ஆர்.சி., லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்

4 மணி நேரத்திற்கு ரூ.70000 சம்பளம்

அமேசான் நிறுவனம் டெலிவரி சேவைக்கு ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே சம்பளம் வழங்குகிறது. ஊக்கத்தொகையாக ரூ.15 முதல் ரூ.20 வரை ஒவ்வொரு பார்சல் டெலிவரிக்கும் வழங்கப்படுகிறது. சுமாராக ஒரு நாளைக்கு 100 முதல் 150 பார்சல்களை டெலிவரி செய்யும் போது ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை சாம்பாதிக்க முடியும். உங்களு வாகனத்திற்கான பெட்ரோலை நீங்களே நிரப்பிக்கொள்ள வேண்டியது கட்டாயம்.


மேலும் படிக்க..

வேளாண் கள அலுவலர் பணியிடங்கள் காலி! படிப்பு, தகுதி, சம்பளம் முழுவிவரம் உள்ளே!

ரூ.80ஆயிரம் சம்பளத்தில் வேலை : உடனே விண்ணப்பியுங்கள்!

நீங்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியா? கிராம உதவியாளராகலாம் உங்களுக்கான வாய்ப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)