இந்தியன் ஆயில் நிறுவனம், முன்னா'என்று பெயரிடப்பட்டுள்ள, 2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்களை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கனை செய்ய முடிவு செய்துள்ளது.
பெறுவது எப்படி
வீடுகளில் சமையலுக்கு நாம் பயன்படுத்திவரும் சமையல் எரிவாயு சிலிண்டர், 14.2 கிலோ எடை கொண்டது. இந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற, ஆதார் அட்டை, முகவரி சான்று, டிபாசிட் தொகை ஆகியவற்றைச் செலுத்த வேண்டும்.
சோட்டு சிலிண்டர்
இதனால், இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், அவர்களின் வசதிக்காக, 'சோட்டு' என்ற பெயரில், 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது.
இந்நிலையில், , முன்னா என்ற பெயரில், சிறிய வடிவிலான குட்டி சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, காஸ் ஏஜன்சிகளில் வழங்கி பெற்று கொள்ளலாம்.
சூப்பர் மார்க்கெட்டுகளில்
இதையடுத்து, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், 2 கிலோ சிலிண்டரை விற்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இந்த சிலிண்டரை, வாடிக்கையாளர்கள் 971 ரூபாய் செலுத்தி சொந்தமாக வாங்கலாம்.
பின்னர், காஸ் தீர்ந்ததும், மாதந் தோறும் நிர்ணயிக்கும் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்கான தொகை, இம்மாதம் 263 ரூபாயாக உள்ளது.
ஒருகாலத்தில் ரூ.400ஆக விற்கப்பட்ட நிலையில், 14 .2 கிலோ சமையல் சிலிண்டர் விலை, தற்போது ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...