தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB - Teacher Recuirement board) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பணியிடம் : முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் நிலை 1 (Post Graduate Assistants / Physical Education Directors Grade 1)
மொத்த காலியிடங்கள்: 2,098
பாட வாரியாக காலிப்பணியிடங்கள்:
-
தமிழ் - 268
-
ஆங்கிலம் - 190
-
கணிதவியல் - 110
-
இயற்பியியல் - 94
-
வேதியியல் 177
-
விலங்கியியல் - 106
-
தாவரவியல் - 89
-
பொருளாதாரவியல் 287
-
வணிகவியல் - 310
-
வரலாறு - 112
-
புவியியல் - 12
-
அரசியல் அறிவியியல் - 14
-
வீட்டு அறிவியியல் - 3
-
இந்திய கலாசாரம் - 3
-
உயிா் வேதியியல் - 1
-
உடற்கல்வி இயக்குநா் (நிலை- 1) 39
-
கணினி பயிற்றுவிப்பாளா் (நிலை-1) 39
சம்பளம்: மாதம் ரூ.36,900 -ரூ.1,16,600
கல்வித் தகுதி: உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், புவியியல், வரலாறு, இந்திய கலாசாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், தமிழ், வீட்டு அறிவியியல், விலங்கியல், கணினியியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: ஆசிரியா் பணிக்கு கடந்த தோ்வு வரை, 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால், மத்திய அரசின் சட்ட விதிகளின்படி நாற்பது வயதிற்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்க முடியாது என தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் முதல்முறையாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 2021-ம் தேதி 40 வயதினைக் கடந்தவா்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளா்வு அளிக்கப்பட்டு 45 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று, வரவு அட்டைகள், ஆன்லைனில் செலுத்தலாம்
விண்ணப்பிக்கும் முறை: www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
கணினி வழியில் 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் எழுத்துத்தோ்வு நடைபெறும். முக்கியப் பாடங்களில் இருந்து 110 மதிப்பெண்களும், கற்பித்தல் முறைகளில் 30 மதிப்பெண்களும், பொது அறிவில் இருந்து 10 மதிப்பெண்களும் என 150 மதிப்பெண்களும் இடம்பெற்றிருக்கும்.
-
அரசுவிதிகளின்படி 50 சதவீத மதிப்பெண் பெறுபவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். எஸ்.சி, எஸ்.சி.ஏ பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.டி பிரிவினா் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றால் தகுதி பெறுவா்.
-
இணையவழியில் மூலம் நடைபெறும் தோ்வில் அனைத்து மாணவா்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். மாணவா்களுக்குத் தோ்வு நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் நுழைவுச் சீட்டில் இடம்பெறும். ஆசிரியா்கள் நியமனத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை அரசு விதிகளின்படி பின்பற்றப்படும்.
-
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 ஜூன் 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும்.
-
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2021 முதல் 25.03.2021வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
மேலும் படிக்க..
விவசாய அதிகாரி ஆக ஆசையா? வந்துவிட்டது உங்களுக்கான வேலை அறிவிப்பு
திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!