திருமண விழா ஒன்றில், மணமகன் குதிரையில் ஏற தயாரான போது அவரது கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான ரூ. 500 நோட்டுகளால் ஆன காசு மாலையை சிறுவன் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக சில திருமணங்களில், மணமக்கள் குதிரை வண்டியில் ஊர்வலம் வருவதும், மணமகன் குதிரையில் ஏறி வருவதும் இடம்பெறுவது உண்டு. அவ்வாறு இங்கு நடைபெற்ற ஊர்வலத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமாலை பறித்துச்செல்லப்பட்டது
குதிரை ஊர்வலம்
டெல்லி, தலைநகர் டெல்லியின் மயபுரியில் ரிஸ்வான் கானுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியின் போது மணமகளின் சகோதரனான சர்பிராஸ் கான் தனது மைத்துனருக்கு 500 ரூபாய் நோட்டால் பண மாலை அணிவித்துள்ளார். 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 400ஐ கொண்டு மிகப்பெரிய காசு மாலை அணிவித்துள்ளார். அந்த காசு மாலையில் மொத்தம் 2 லட்ச ரூபாய் பணம் இருந்தது. மணமகன் ரிஸ்வான் கான் காசு மாலையை தனது கழுத்தி அணிந்தபடி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
பணமாலை பறிப்பு
திருமண நிகழ்ச்சியின்போது மணமகன் குதிரையில் ஏறி செல்லும் தயாரானார். அப்போது, மணமகன் ரிஸ்வான் குதிரையில் ஏற தயாரான போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 13 வயது சிறுவன் மணமகனின் கழுத்தில் அணிந்திருந்த காசு மாலையை திடீரென பறித்துக்கொண்டு ஓடினார்.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகனும் உறவினர்களும் காசு மாலையை பறித்துக்கொண்டு ஓடிய சிறுவனை துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால், 2 லட்ச ரூபாய் பணத்திலான காசு மாலையை சிறுவன் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
79 நோட்டுகள் பறிமுதல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் 79-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். எஞ்சிய 329 நோட்டுகள் 500 ரூபாய் காசு மாலையை போலீசார் தேடி வந்த நிலையில் காசு மாலையை பறித்துக்கொண்டு சென்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க…
பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!