1. செய்திகள்

வங்கிகள் 10 நாட்கள் மூடப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!.

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறைப் பட்டியலின்படி, பிப்ரவரி 2023 இல், வங்கிகள் 10 நாட்களுக்கு இயங்காது என தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 2023 இல், வங்கிகள் 10 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும்.

வங்கிகள் இயங்காது

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனவரி மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள், பொது விடுமுறைகள் என குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து, தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கி வேலைநிறுத்தம்

ஜனவரி 30 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் வங்கி சேவைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், ஜனவரி 28 மற்றும் ஜனவரி 29 ஆகிய தேதிகளில் வார இறுதி விடுமுறைகள் வருகிறது.

வங்கிச்சேவை பாதிப்பு

எனவே தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு வாடிக்கையாளர்கள் செயல்படுமாறு வங்கி ஊழியர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

4  நாட்கள்

இதனைக் கருத்தில்கொண்டு, பார்த்தால்,  தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்பது உறுதியாகி உள்ளது. என்றாலும், இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் இணையதளம் வாயிலாக  வங்கி சேவைகளை தடையில்லாமல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க…

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Banks will not operate for 4 consecutive days - Attention customers! Published on: 26 January 2023, 10:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.