Blogs

Friday, 15 July 2022 06:29 PM , by: R. Balakrishnan

Emergency pension sheme

மகாராஷ்டிர மாநிலத்தில் எமர்ஜென்சி பென்சன் திட்டம் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் மீண்டும் எமர்ஜென்சி பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எமர்ஜென்சி பென்சன் திட்டம் (Emergency Pension Scheme)

மகாராஷ்டிர மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸால் எமர்ஜென்சி பென்சன் திட்டம் தொடங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சி அமல்படுத்திய போது எமர்ஜென்சியை எதிர்த்து போராடி சிறைத்தண்டனை அனுபவித்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டில் சிவ சேனா கூட்டணி ஆட்சி அமைந்தபின் எமர்ஜென்சி பென்சன் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே. இந்நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் எமர்ஜென்சி பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று (ஜூலை 14) மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

எமர்ஜென்சி பென்சன் திட்டத்தில், பயனாளியின் சிறை தண்டனைக் காலத்துக்கு ஏற்ப 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பென்சன் வழங்கப்பட்டு வந்தது. ஒரு மாதம் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் 5000 ரூபாயும், மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் 10,000 ரூபாயும் பென்சன் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டத்தில் அப்படி என்ன தான் இருக்கு: இதோ அதன் சிறப்பம்சங்கள்!

பென்சன் தொகையை உயர்த்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)