1. செய்திகள்

பென்சன் தொகையை உயர்த்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை!

R. Balakrishnan
R. Balakrishnan
The Prime Minister's Economic Advisory Committee recommends

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில், பணிபுரியும் நபர்களுக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு பென்சன் பெறும் வயதை அதிகரிப்பதுடன், உலகளாவிய ஓய்வூதிய முறையையும் தொடங்க வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இதற்கான முன்மொழிவையும் இக்குழு அனுப்பியுள்ளது.

பென்சன் தொகை (Pension Amount)

பென்சன் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். நாட்டிலுள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்கு இதற்கான பரிந்துரையை பொருளாதார ஆலோசனைக் குழு வழங்கியுள்ளது. பணிபுரியும் வயதுடைய மக்கள் தொகை அதிகரிக்க வேண்டுமானால், ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சமூக பாதுகாப்பு அமைப்பு மீதான அழுத்தத்தை குறைக்க இந்த மாற்றம் செய்யப்படலாம். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான திறன் மேம்பாடும் அவசியம் என்று இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் போன்றோரும் பயிற்சி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 32 கோடி மூத்த குடிமக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 19.5 சதவீதம் பேர் ஓய்வு பெற்றவர்கள் என்ற பிரிவிற்குள் செல்வார்கள். 2019ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் அல்லது 140 மில்லியன் மக்கள் மூத்த குடிமக்கள் பிரிவில் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் சலுகை வழங்கும் வகையில் இந்தப் பரிந்துரைகளை பொருளாதார ஆலோசனைக் குழு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம் தான் வேண்டும்: அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!

பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்!

English Summary: The Prime Minister's Economic Advisory Committee recommends increasing the amount of pension! Published on: 08 July 2022, 09:13 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.