மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 October, 2020 10:47 AM IST
Credit :Samayam Tamil

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல விதமான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பை வழங்குகிறது. சேமிப்புக் கணக்கு (Savings Account), நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) என அனைவருக்கும் பரீட்சியமான வங்கி கணக்குகள் தவிர, சேவிங்ஸ் பிளஸ் (Savings Plus) என்ற கணக்கும் ஸ்டேட் வங்கியில் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது.

வங்கி கணக்குகள்

பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை (Multi Option Deposit) இந்த வங்கிக் கணக்கின் மூலம் வழங்குவதால் இது 'Savings Plus Account' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சேரும் பணம் (குறைந்தபட்சம் ரூ.1,000) நிரந்தர வைப்பு நிதி (Fixed Deposit) போன்ற பிற முதலீடுகளுக்கு தானாகவே மாற்றப்படும்.

சேவிங்ஸ் பிளஸ் கணக்கை தொடங்குவது எப்படி?

சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் தகுதி உடைய அனைவரும் சேவிங்ஸ் பிளஸ் கணக்கையும் தொடங்க முடியும். பிற முதலீடுகளுக்கு பணத்தை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் ரூ.35,000 மேல் கணக்கில் பணம் சேர வேண்டும். ரூ.35,000க்கு அதிகமாக சேரும் பணம் ஆயிரம், ஆயிரம் ரூபாய்களாக மற்ற முதலீட்டுக்கு மாற்றம் செய்யப்படும்.

குறைந்தபட்ச இருப்பு தொகை

  • மெட்ரோ நகரங்களில் சேவிங்ஸ் பிளஸ் கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச இருப்புத் தொகையின் மாத சராசரி (Average Minimum Balance) ரூ.3000 இருக்க வேண்டும்.

  • புறநகர்களில் இந்தக் கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ரூ.2000.

  • கிராமப்புறங்களில் இந்தக் கணக்குக்கு ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத்தொகை கட்டாயம் இருக்க வேண்டும்

 

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

சாதாரண சேமிப்புக் கணக்கிற்கு கிடைக்கும் அதே அளவு வட்டியே இந்த சேவிங்ஸ் பிளஸ் கணக்குக்கும் கிடைக்கும். மற்ற முதலீடுகளின் அளவு குறைந்தபட்சம் ரூ.10,000ஆக இருக்க வேண்டும். இந்த தொகை ஆயிரம் ரூபாய்களாக மாற்றப்படும். இதன் முதலீட்டு காலம் ஒன்று முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

மேலும் படிக்க...

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமா? 59 நிமிடங்களில் கடன் பெறலாம்!!

விவசாயிகளா நீங்கள்..! வட்டியே இல்லாமல் கடன் வாங்கலாம்!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்..! நாளொன்றுக்கு ரூ.60 வீதம் மாதத்திற்கு ரூ.1,800/- சேமித்தால் போதும்!

English Summary: The First Step to Savings SBI Savings Plus Plan. All you know about here
Published on: 31 August 2020, 07:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now