1. செய்திகள்

விவசாயிகளா நீங்கள்..! வட்டியே இல்லாமல் கடன் வாங்கலாம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit: First avenue wealth

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. வங்கிகள், கிசான் கிரெடிட் கார்டு என பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் விவசாயக் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகளுக்கு முற்றிலுமாக வட்டியே இல்லாமல் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0% வட்டியில் கடன்! - Zero interest

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன்படி ஹரியானா மாநில அரசு தற்போது விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டி சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மாநில அரசுகளின் பங்கு - Centre and state share 

விவசாயக் கடன்களுக்கு பொதுவாக 7% வட்டி வசூலிக்கின்றன. இதில் 3% வட்டியை மத்திய அரசும், 4% வட்டியை மாநில அரசும் பகிர்ந்துகொள்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 0% வட்டியில் கடன் வழங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக வங்கியிலேயே கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.


கிரெடிட் கார்டு வசதி உண்டு - Kisan Credit card 

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. இதேபோல, கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிரெடிட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு தொழில் செய்யும் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க... 

"Uzhavan app" மூலம் வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் பெறுவது எப்படி? முழு வழிமுறைகள் இங்கே!

Kisan Credit card: கிசான் கிரெடிட் கார்டு கடனை ஆகஸ்ட் 31-க்குள் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?

ஆகஸ்டு 31-க்குள் உங்கள் பயிரை காப்பீடு செய்திடுங்கள் - மாவட்ட வாரியன பயிர்களுக்கான காப்பீடு விவரம் உள்ளே!!

 

English Summary: Are you a farmer ..! Borrow without interest on crop loans Published on: 27 August 2020, 06:30 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.