கங்காருவை செல்ல பிராணி போல் வளர்த்து வந்த முதியவரை, அவரது வளர்ப்புப் பிராணியேத் தாக்கிக் கொன்ற சம்பவம் ஆஸ்திரேலியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு பிராணிகளான செல்லப்பிராணிகளை வளர்ப்பது, அமெரிக்கா, ஆஸ்திரேலியாக போன்ற நாடுகளில் வாடிக்கையான ஒன்று. இதற்கு நம்மூரில், நாய், பூனை, முயல் போன்றவற்றை வளர்ப்பார்கள்.
ஆனால் வெளிநாடுகளைப் பொருத்தவரை, எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டுவார்கள். தாய்மைக்குப் பெயர் பெற்ற கங்காருவைக்கூட வளர்ப்பார்கள். அப்படி ஒருவர் வளர்த்த கங்காரு, அவரைக் தாக்கிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கங்காரு தாக்கியதில், பலத்தக் காயமடைந்த அந்த நபரை மருத்துவ குழு அணுக விடாமல் கங்காரு தடுத்துள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கங்காரு
சாதுவான விலங்காக கருதப்படும் கங்காரு ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டது. இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரமான ரெட்மண்டில் 77 வயது முதியவர் ஒருவர் உடலில் கடுமையான காயங்களுடன் தனது வீட்டில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு சென்ற போது அந்த நபரை அணுக விடாமல் கங்காரு ஒன்று தடுத்துள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் அதிர்ச்சி
பின்னர் அந்த நபரை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்த விசாரணையின் அடிப்படையில் காங்காருவை அந்த முதியவர் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். தற்போது அவரது உயிரிழப்பிற்கு கங்காரு தாக்கியதே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு பிறகு
இதற்கு முன்னர் 1936 ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்ற வில்லியம் என்ற நபர் அந்த விலங்கால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் 86 ஆண்டுகள் கழித்து கங்காரு தாக்கி முதியவர் மரணமடைந்தது, அந்நாட்டின் அபாயகரமான தாக்குதலாக கருதப்படுகிறது.
இயற்கை குணம்
எவ்வளவுதான் செல்லப்பிராணிகளை நம் உயரினும் மேலாக வளர்த்தாலும், சில சமையங்களில் அவை தங்களின் இயற்கையான குணத்தை வெளிப்படுத்தாமல் இருக்காது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
மேலும் படிக்க...
95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம்- அதிர்ச்சியில் கூலித்தொழிலாளி!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.5600 சம்பளம்-இதுவும் சூப்பர் பிஸ்னஸ்தான்!