பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 August, 2021 8:04 AM IST

​​பீஹாரில், பாம்புகளின் நண்பர் என, அழைக்கப்பட்ட வாலிபர், சமீபத்தில் ரக் ஷா பந்தனையொட்டி அவைகளுக்கு 'ராக்கி' கட்டினார். அப்போது, ஒரு பாம்பு கடித்ததில் அவர் பலியானார்.

ஐந்தறிவு ஜீவன்கள் (Cognitive lives)

விலங்குகள் மனிதர்களோடு மனிதர்களாகப் பழகினாலும், அவை ஐந்தறிவு படைத்தவை என்பதை வெளிப்படுத்தும் வகையில், தங்களுடைய மிருகக் குணத்தை எப்போதாவது காட்டிவிடுகின்றன. இதனால், எதிர்பாராத சம்பவங்களும், விபரீத விளைவுகளும் ஏற்படும்போது, விலங்குகள் மீது வைத்த பாசத்திற்கும், காட்டிய அன்பிற்கும் உயிர்தான் விலையா? என எண்ணத் தோன்றுகிறது.

பாம்புகளின் நண்பன் (Friend of snakes)

அப்படியொரு சோகச்சம்பவம் பீஹாரில் நடந்தது. பீஹாரில், சரண் மாவட்டத்தின் சப்ரா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் மன்மோகன். 25 வயதான இந்த இளைஞருக்கு பாம்புகள் மிகவும் பிடிக்கும்.

அவற்றோடு நெருக்கமாகப் பழகுவதை வழக்கமாகவும் கொண்டிருந்தார்.
எலக்ட்ரீஷியனாக பணியாற்றிய மன்மோகன், வீடுகளுக்குள் நுழையும் விஷப் பாம்புகளைப் பிடித்து அகற்றும் சமூகப் பணியைத் தனது பகுதிநேரப் பணியாகவும் செய்து வந்தார்.

அதுமட்டுமல்ல, பாம்புகள் காயமடைந்தால் அவற்றுக்கும், பாம்பு கடியால் அவதிப்படுவோருக்கும் சிகிச்சை அளித்துள்ளார். இரு தரப்பினருக்கும் நண்பனாகத் திகழ்ந்ததால், ம் பாம்புகளின் நண்பர் என அழைக்கப்பட்டார்.
அதேநேரத்தில், பாம்புகடியால் அவதிப்படுவோருக்கு, இலவசமாகச் சிகிச்சை அளித்து வந்தார்.

பாம்புகளுக்கும் ராக்கி (Rocky for snakes)

அண்மையில் ரக் ஷா பந்தன் கொண்டாடிய மன்மோகன், தன் சகோதரிக்கு மட்டுமின்றி, பாம்புகளுக்கும் ராக்கி கட்டி உள்ளார். பின், இரண்டுப் பாம்புகளை கையில் பிடித்து விளையாடியுள்ளார். இந்த காட்சிகளை, வீட்டில் இருந்தவர்கள் 'மொபைல் போனில் வீடியோ' பதிவு செய்து உள்ளனர்.

பரிதாபப் பலி (Pathetic death)

அப்போது, பாம்புகளில் ஒன்று காலில் கடித்ததால் மன்மோகன் பரிதாபமாக பலியானார். அவரது மரணம், அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் படிக்க...

மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு

சர்வதேச பாம்புகள் தினம்- பாம்பை கண்டால் படையும் நடுங்கும்

English Summary: The snake that tied the rock to the snakes, the gift of youth-death!
Published on: 26 August 2021, 08:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now