1. செய்திகள்

சர்வதேச பாம்புகள் தினம்- பாம்பை கண்டால் படையும் நடுங்கும்

Aruljothe Alagar
Aruljothe Alagar

World Snake day

பாம்பை கண்டால் படையும் நடுங்கும். இன்று உலக பாம்புகள் தினம். ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக பாம்பை சேர்த்துள்ளனர் மனிதர்கள்.அதனால் தான் பாம்பை கண்டால் தலையை நசுக்கு என்ற பழமொழிகளும் உருவாகின. அதனை கண்டாலே அடித்து கொள்கின்றனர். பயிர்களை சேதப்படுத்தும் உயிரினங்களை தனக்கு இரையாக்குவது பாம்புகள் மட்டுமே.

விவசாயிகளுக்கு அதிகமாக உதவிகளை செய்துள்ளது என்றே கூறலாம். மேலும் பாம்புகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே சர்வதேச பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாம்புகளை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.

விஷத்தன்மையுள்ள பாம்புகளிடம் கடிப்பது வருடத்திற்கு 1,38,000 பேர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில நாடுகளில் கண்டுகொள்ளப்படாத பிரச்னையாகவே உள்ளது. பாம்புகள் பல்லூயிர்  பெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன.அதில் விஷமுள்ளவை விஷமில்லாதவை என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், சாரை, கொம்பேறி மூக்கன், வெள்ளிக்கோல் விரியன் என பல பாம்பு வகைகள் உள்ளன. மேலும் ராஜநாகங்களும் காணப்படுகின்றன.

பாம்புகள் அதிர்வுகளாலேயே சுற்றி இருக்கும் நடமாட்டத்தை புரிந்து கொள்ளும். பாம்பை தெரியாமல் தீண்டினால் முதலில் அது எச்சரிக்கை செய்யும். மனிதத்கல் அதனை தவறாக புரிந்து கொண்டு கொள்கின்றனர்.

பொதுவாகவே பாம்புகளுக்கு பற்கள் கிடையாது அது தனது விஷத்தை வைத்தே உணவை செரிக்க செய்கிறது. பெரிய இரைகளை வேட்டையாடி உண்ணவும் அதனை செரிக்க செய்யவும் இந்த விஷ தன்மை தான் உதவுகிறது. முடிந்தவரை பாம்புகளை கொள்ளாமல் வனத்துறையினரிடம் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க: 

நல்லபாம்பு விஷத்தின் மதிப்பு தெரியுமா?

English Summary: International Snake Day - The army trembles when it sees a snake

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.