தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU) முதுகலை மாணவர் எஸ்.அரவிந்தகுமாரின் ஆய்வறிக்கைக்கு, இந்திய அளவில் முதலிடம் கிடைத்துள்ளது.
தேசிய நிறுவனம் (National Institute)
வேளாண் விரிவாக்க முதுகலை மற்றும் முனைவர் பிரிவில் இந்திய மாணவர்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த ஆராய்ச்சிப் பணிகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
விருது (Award)
இதன் ஒருபகுதியாக தேசிய அளவில் சிறந்த வேளாண் விரிவாக்க ஆய்வரிக்கை விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அதிகாரிகளிடையே உழவன் செயலியின் பயன்பாட்டின் பயன்பாட்டு நடத்தை மதிப்பீடு' என்ற தலைப்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதுகலைப் பிரிவு மாணவர் எஸ்.அரவிந்தகுமார் சமர்ப்பித்த ஆய்வறிக்கை, இந்த ஆண்டுக்கான விருதை (முதல் பரிசு) பெற்றது.
பல்கலைக்கழக மாணவர் (University student)
இந்த மாணவர், வேளாண் விரிவாக்கம் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் தனது முதுகலை படிப்பை, வேளாண் விரிவாக்கப் பேராசிரியர் முனைவர் ச.கார்த்திகேயன், சமூகஅறிவியல் துறை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வழிகாட்டுதலின் கீழ் முடித்தவர்.
நிறுவன நாள் விழா (Foundation Day Ceremony)
இந்நிலையில் தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் 34வது நிறுவன நாள் 11.06.2021 அன்று இணையவழியில் நடைபெற்றது.
இந்த விழா தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் முனைவர் பி. சந்திரசேகரா முன்னிலையில் இணையவழியில் நடைபெற்றது.
ரூ.50,000 ரொக்கம் (Rs 50,000 cash)
இதில், விருது சான்றிதழ் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தொகையை மத்திய வேளாண் மற்றம் உழவர் நல அமைச்சகத்தின், வேளாண் கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சஞ்சய் அகரிவால், மாணவர் எஸ்.அரவிந்தகுமாருக்கு வழங்கினார். விருது பெற்ற அரவிந்தகுமாருக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
Kallanai Dam Open : குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு!
புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!