1. விவசாய தகவல்கள்

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Water from Mettur Dam to be opened for cultivation on June 12 - Chief Minister's order!
Credit: Salem District

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 12ல் (On June 12th)

தமிழகத்தின் முக்கிய வேளாண் மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் இருந்துத் திறக்கப்படும் நீரைக் கொண்டு, 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

அணை திறப்பதில் சிக்கல் (Problem opening the dam)

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தேவையான அளவுத் தண்ணீர் அணையில் இல்லாத பட்சத்தில், தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது.

நீர் திறக்கும் வழிமுறை (Water opening mechanism)

பாசனத்துக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடி, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, 101 அடியாக இருந்தது. இதனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு (2020) ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்துத் தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போதைய நிலவரம் (Current situation)

நடப்பாண்டில் தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 97.13 அடி. நீர் இருப்பு, 61.43 டி.எம்.சி.,யாக உள்ளது.

முதல்வர் அறிவிப்பு (Chief Notice)

இந்நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

5.21 லட்சம் ஏக்கர் நிலம் (5.21 lakh acres of land)

மேட்டூர் அணை நீர் திறப்பால் 8 மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை, டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

மேலும் படிக்க...

கொரோனா நிவாரண நிதி: ரூ.2000 பெறாதவர்கள் இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்!!

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!

300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?

English Summary: Water from Mettur Dam to be opened for cultivation on June 12 - Chief Minister's order! Published on: 03 June 2021, 06:03 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.