Blogs

Tuesday, 16 February 2021 06:19 PM , by: Daisy Rose Mary

வேளாண் துறையில் அரசு வேலை தேடுவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) , உதவி வேளாண் அலுவலர் (ஏஏஓ), மற்றும் தோட்டக்கலை உதவி வேளாண் அலுவலர் என மொத்தம் 794 காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC Recruitment 2021: பணி விவரங்கள்

பணி: வேளாண் அலுவலர் (Agricultural Officer (Extension)

  • காலிப் பணியிடங்கள்: 365

  • பணியிடம்: தமிழ்நாடு

  • பணி முறை: முழு நேரப் பணி

  • விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 4, 2021

  • கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் நபர்கள் வேளாண்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (B.Sc Agri) மற்றும் தமிழ் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்

  • சம்பளம்: மாத்த்திற்கு ரூ.37,700 - ரூ.1,19,500

  • வயது வரம்பு: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்

  • கட்டண விபரம் : அனைவருக்கும் ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.150. பின்னர், தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.200 மற்றும் SC/ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

பணி: உதவி வேளாண் அலுவலர் (Assistant Agricultural Officer (AAO)

  • காலிப் பணியிடங்கள்: 122

  • பணியிடம்: தமிழ்நாடு

  • பணி முறை: முழுநேரம்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 4, 2021

  • கல்வித் தகுதி ; விண்ணப்பிக்கும் நபர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தில் வேளாண் துறையில் 2வருட டிப்ளோமா படிப்பு படித்திருக்க வேண்டும்.

  • சம்பளம்: மாதத்திற்கு ரூ.20,600 - ரூ.65,500

  • வயது வரம்பு: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

  • கட்டண விபரம்: அனைவருக்கும் ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.150. பின்னர், தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100 மற்றும் SC/ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

பணி: தோட்டக்கலை உதவி வேளாண் அலுவலர் (Assistant Horticultural Officer(AHO)

  • காலிப் பணியிடங்கள்: 307

  • பணியிடம்: தமிழ்நாடு

  • பணி முறைமுழுநேரம்

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 4, 2021

  • கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் நபர்கள் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தில் வேளாண் துறையில் 2வருட டிப்ளோமா படிப்பு படித்திருக்க வேண்டும்.

  • சம்பளம்: மாதத்திற்கு ரூ.20,600 - ரூ.65,500

  • வயது வரம்பு: 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்

  • கட்டண விபரம்: அனைவருக்கும் ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.150. பின்னர், தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100 மற்றும் SC/ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிப்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் காலிப் பணியிடங்களுக்கு, தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முறையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணபிக்க வேண்டும்.

இப்போதே நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

டி.என்.பி.எஸ்,சி., தேர்வுமுறை

எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு அல்லது நேர்காணலில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்.

மேலும் படிக்க..

NABARD மாணவர் வேலைவாய்ப்பு திட்டம் : 75 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - முழு விபரம் உள்ளே!

வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!

விவசாய அதிகாரி ஆக ஆசையா? வந்துவிட்டது உங்களுக்கான வேலை அறிவிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)