சிறைவளாகம் என்பது செய்தத் தவறை உணர்ந்து, நம்மைத் திருத்திக் கொள்வதற்கான இடம்.
இந்த இடத்தில் இருந்துதான், பல தலைவர்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டதுடன், உன்னதச் சிந்தனைகளை உலகுக்கு வழங்கினர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சிறை என்பது, சமூக விரோதக் கும்பல்களுக்கு தாய் வீடாக இருப்பதுதடன், அங்கும் பல அத்துமீறல்கள் அரங்கேறுகின்றன.
விதிமீறல்கள் (Irregularities)
குறிப்பாக சிறையில் சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கம், பீடி, செல்போன் பயன்பாடு உள்ளிட்டவை அதிகரித்திருப்பதாகப் புகார்கள் வந்தால், உடனடியாக அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு திஹார் சிறையில் நடத் ரெய்டிற்கு பயந்து கைதி ஒருவர், செல்போனை விழுங்கிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
திகார் சிறை (Tihar Jail)
இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறையாகவும், மிக மோசமான சிறையாகவும் வருணிக்கப்படுவது, டெல்லியில் உள்ள திகார் சிறை.இங்குள்ள கைதிகள் பலரிடம் செல்போன் இருப்பதாக கடந்த ஜனவரி 5ம் தேதி சிறை வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது.
அதிரடி சோதனை (Raid)
இதையடுத்து வார்டன்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வார்டன்கள் சோதனை செய்து வருவதைபார்த்ததும் விசாரணைக் கைதி ஒருவர் தன் கையில் வைத்திருந்த செல்போனை மறைப்பதற்கு வழியில்லாததால் அதை வாயில் போட்டு விழுங்கியுள்ளார்.
இதையடுத்து சிறை ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். செல்போனை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளனர்.
குற்றக் கூட்டணி
பல்வேறு இடங்களில் சிறு சிறு குற்றங்கள் செய்து பிடிபட்டவர்கள் சிறையில் ஒன்றாக இருக்கும் போது நட்பாக பழகுகிறார்கள் பின்னர் அவர்கள் வெளியில் வந்ததும் ஒன்றாக சேர்ந்து பெரிய அளவிலான குற்றங்களை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
மேலும் படிக்க...