மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2,000 பேருக்கு மருந்துக்கு பதில், சிரஞ்சியில் பதில் தண்ணீர் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அச்சுறுத்தும் கொரோனா (The threatening corona)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்காப்பு நடவடிக்கை (Defensive action)
இதன் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஏதுவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
தடுப்பூசி முகாம் (Vaccination camp)
மேலும் தடுப்பூசியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனை வாங்கி மாநில அரசுகள் மக்களுக்கு இலவச முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணியை மாநில அரசுகள் முடக்கிவிட்டுள்ளன.
ரூ.3000 வரை (Up to Rs.3000)
ஆனால் அதேநேரத்தில், எந்த சூழ்நிலையையும், தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, கொள்ளை லாபம் அடிக்கும் சில தனியார் மருத்துவமனைகள் இந்த தடுப்பூசிக்கு ரூ.3 ஆயிரம் ரூபாய் வரைக் கட்டணம் வசூலிக்கின்றன.
மருந்துக்கு பதிலாகத் தண்ணீர் (Water instead of medicine)
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் உள்ள பல குடியுருப்புகளில், தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி முகாம் எனக் கூறி, கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தண்ணீர் செலுத்தி ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தடுப்பூசி முகாம் (Vaccination camp)
மும்பை குடியிருப்பு ஒன்றில், கடந்த மே 30ம் தேதி தடுப்பூசி செலுத்தும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ரூ.1260 கட்டணம் (Fee of Rs.1260)
இந்த முகாமில் குடியிருப்பைச் சேர்ந்த 390 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒருவருக்கு 1,260 ரூபாய் வீதம் மொத்தம் 4.56 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
தடுப்பூசி சான்று (Vaccine proof)
-
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 120 பேருக்கு மட்டுமே வெவ்வேறு மருத்துவமனைகளின் பெயரில் தடுப்பூசி சான்று வந்தது.
-
சான்று கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டதில், அந்த மருத்துவமனைகளுக்கு இச்சம்பவம் பற்றி தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தடுப்பூசிக்கு பதில் தண்ணீர் (Water in response to vaccination)
தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்ததில், முகாமில் செலுத்தப்பட்டது தடுப்பூசி அல்ல, தண்ணீர் என தெரிய வந்தது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தண்ணீர் குப்பிகள் (Water bottles)
இவர்கள், மும்பை மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளிடம் இருந்து காலி குப்பிகளை பெற்று, அதில் தண்ணீர் நிரப்பி, தடுப்பூசி எனக் கூறி 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமானோருக்கு செலுத்தியது தெரிய வந்துள்ளது.
இதே போல், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் உட்பட 500 பேருக்கு போலி தடுப்பூசி போடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க...