2016ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.10,000 வரையில் சம்பாதிக்கலாம்.
நிதிச்சுமை (Financial burden)
கொரோனா நெருக்கடி காலத்தில், சுகாதரத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டியதுக் கட்டாயமாகியுள்ளது. அதே நேரத்தில், மருத்துவச்செலவு, பராமரிப்பு செலவு என பொருளாதாரச்சுமைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
பணம் சம்பாதிக்க (Make money)
அதாவது கையில் காசு இல்லாமல் தவிக்கும் இந்தச் சூழலில், பணம் சம்பாதிக்க ஏதாவது எளிய வழி இருக்கிறதா என சிந்திப்பவரா நீங்கள். அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
பழைய நோட்டு (Old note)
வீட்டில் அமர்ந்துகொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அதற்குப் பழைய நாணயங்கள், நோட்டுகள் உங்களிடம் இருந்தாலே போதும். அவை அரிய வகையாக இருக்க வேண்டும். இதற்காகவே சமீப காலத்தில் பல்வேறு இணையதளங்களில் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
25 பைசா, ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் போன்றவற்றுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.
பணமாகும் நாணயங்கள் (Cash for cash)
25 பைசா, ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் போன்றவற்றுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.
ஆனால் பழைய 500 ரூபாய் நோட்டுக்கும் இவ்வாறு பணம் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
செல்லாத நோட்டு (Invalid note)
2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மத்திய மோடி அரசால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
புதிய நோட்டுகள் (New notes)
அந்த நோட்டுகளை மக்கள் உடனடியாக வங்கிகளில் திருப்பிச் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
அதற்குப் பதிலாக புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டும், புதிய 2,000 ரூபாய் நோட்டும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இப்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த பழைய நோட்டுகள் இருந்த இடமே இல்லாமல் போய்விட்டன.
ரூ.500க்கு ரூ.10,000 (Rs.500 to Rs.10,000)
தற்போது அந்தப் பழைய 500 ரூபாய் நோட்டு அரிய வகை நோட்டுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. அந்த நோட்டு உங்களிடம் இருந்தால் அதை வைத்து ரூ.10,000 வரையில் சம்பாதிக்கலாம்.
வெப்சைட் (Website)
அதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. oldindiancoins.com வெப்சைட்டில் அதை விற்பனை செய்யலாம். அந்த வெப்சைட்டில் பதிவு செய்து, உங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!