Blogs

Sunday, 17 October 2021 06:51 AM , by: Elavarse Sivakumar

Credit : DTNext

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் விரையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓட்டுநர் பணியிடங்கள் (Driving workplaces)

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) காலியாக உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.தகுதியானவர்கள் 27.10 2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஓட்டுநர் (Driver)

மொத்த காலியிடங்கள்(Vacancy)

25

கல்வித் தகுதி(Education Qualification)

8ஆம் வகுப்பு தேர்ச்சி

பிறத் தகுதிகள் (Other Qualification)

செல்லத்தக்க நிலுவையிலுள்ள LMV ஒட்டுநர் உரிமம், மோட்டார் வாகன விதிகளின்படி ஒப்பளிக்க தகுதியான அதிகாரி அளித்துள்ள உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் (Experience)

குறைந்தது 2 வருட ஓட்டுநர் அனுபவம் வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் மற்றும் உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது (Age)

  • 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் (Salary)

ரூ. 19,500 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

ஓட்டுநர் திறனறித் தேர்வு மற்றும் வாகனப் பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

காலியாக உள்ளப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க காலக்கெடு(Deadline)

27.10.2021

விண்ணப்பக் கட்டணம் (Fee)

SC/SCA/ST பிரிவுகளுக்கு ரூ 150, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு 300ரூபாயை விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க...

வங்கி மேலாளராக ஆசையா? வாய்ப்பு அளிக்கிறது SBI!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்- அந்த வழக்கில் சிக்கினால்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)