1. Blogs

இந்தியன் ரயில்வேயில் பணியாற்ற வாய்ப்பு- கல்வித்தகுதி 10ம் வகுப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Opportunity to work in Indian Railways - Qualification 10th class pass!
Credit; India Tv News

தனியார் நிறுவனத்தில் பணியாற்றினாலும், அரசாங்க உத்யோகம் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியானால், உங்களுக்கு இந்தத் தகவல் பெரிதும் உதவும்.

4000 பணியிடங்கள் (4000 workplaces)

தெற்கு மத்திய ரயில்வே 4,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விரைவில் ஆட்களை நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது. எனவே தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் scr.indianrailways.gov.in விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் (Vacancies)

  • ஏசி மெக்கானிக் - 250 காலியிடங்கள்

  • தச்சர் - 18 காலியிடங்கள்

  • டீசல் மெக்கானிக் - 531 காலியிடங்கள்

  • எலக்ட்ரீஷியன் - 1,019 காலியிடங்கள்

  • மின்னணு மெக்கானிக் - 92 காலியிடங்கள்

  • ஃபிட்டர் - 1,460 காலியிடங்கள்

  • மெஷினிஸ்ட் - 71 காலியிடங்கள்

  • MMTM - 5 காலியிடங்கள்

  • MMW - 24 காலியிடங்கள்

  • ஓவியர் - 80 காலியிடங்கள்

  • வெல்டர் - 553 காலியிடங்கள்

கல்வித் தகுதி (Educational Qualification)

  • ஒரு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit)

அக்டோபர் 4, 2021 தேதியின்படி, காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் (Last day to apply)

3.11.21

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 3, 2021 (11:59 PM) வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

வங்கி மேலாளராக ஆசையா? வாய்ப்பு அளிக்கிறது SBI!

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்- அந்த வழக்கில் சிக்கினால்!

English Summary: Opportunity to work in Indian Railways - Qualification 10th class pass! Published on: 06 October 2021, 10:54 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.