தமிழக விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானியத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இன்று அமைச்சர் எம்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
மானியத்தொகை (Subsidy)
தமிழக அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் முதல் கட்டமாக அரசு வேளாண்மை துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வேளாண் தொழிலை வளர்ச்சியை நோக்கி, கொண்டு செல்லும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிறு, குறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் பம்பு செட்டு வாங்க மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று அமைச்சர் ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் அனுமதி பெற்று புதிய மின் மோட்டார் பம்பு செட் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ. 10,000 மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக மின் இணைப்பு வைத்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இத்திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது <https://mis.aed.tn.gov.in> என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் whatsapp: வழிமுறைகள் உள்ளே!
விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை ஊக்கத்தொகை: உடனே விண்ணப்பிக்கவும்!