1. செய்திகள்

தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் whatsapp: வழிமுறைகள் உள்ளே!

R. Balakrishnan
R. Balakrishnan
Tamilnadu government schemes

தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் குறித்து வாட்ஸ்அப் மூலம் எளிதாக அறியும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன்

தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்திட்டங்கள் குறித்தும் அதன் பயன் குறித்தும் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. அதனால் தகுதியுடைவர்கள் பயன் பெற முடியாமல் உள்ளனர். மேலும், திட்டங்களை அறிந்தாலும் அதன் மூலம் எவ்வாறு பயன் அடைவது என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை.

வாட்ஸ்அப் (WhatsApp)

இதனை கருத்தில் கொண்டு மக்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசின் திட்டங்களை whatsapp மூலம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப்பிற்கு “மக்கள் நலன் bot” என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் தங்கள் கைகளில் உள்ள ஸ்மார்ட் போன் வாயிலாக தொடர்பு கொண்டு திட்டங்கள் குறித்து அறியலாம். அதற்கான வழிமுறைகளை குறித்து பதிவில் காண்போம்.

வாட்ஸ் அப் மூலம் அறியும் வழிமுறைகள்

  • “மக்கள் நலன் bot” திட்டத்தின் 9445879944 என்ற வாட்ஸ்அப் எண்ணை முதலில் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாட்ஸ்அப் ஓப்பன் செய்து Hi என மெசேஜ் அனுப்பவும்.
  • அடுத்தாக உங்களது மொழி, பாலினம், சமூகம், மதம், வகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அதிலுள்ள திட்டங்கள் உங்களுக்கு திரையில் காண்பிக்கப்படும்.

மேலும் படிக்க

தொழில்முனைவோருக்கு சிறப்பு முகாம்: மிஸ் பன்னாதிங்க!

பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் கிடைக்கவில்லையா? உடனே இதைப் பண்ணுங்க!

English Summary: WhatsApp to help you know about Tamil Nadu government schemes: instructions inside! Published on: 09 January 2023, 06:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.