ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை விற்பனை செய்யப் பட்டு வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்து தந்ததால், கோவை மாவட்ட விவசாயிகள் 10 டன் பட்டுக்கூடு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர்.
விற்பனை அங்காடி (Sales Store)
கோவை மாவட்டம், கோவை பாலசுந்தரம் சாலையில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.
பட்டுக்கூடு விற்பனை (Silkworm sale)
இங்கு கோவை, திருப்பூர், கோபி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளைக் கொண்டு வந்து, விற்பனை செய்வது வழக்கம். இங்கு பட்டுக்கூடு அதிகளவில் விற்பனையாகும்.
விற்பனைக்கு வழியில்லை (No way to sell)
கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டப்பட்டனர்.
நஷ்டத்தைத் தவிர்க்க மாற்றுவழி (Alternative to avoid loss)
இந்த முறை அவ்வாறு நஷ்டம் ஏற்படாமல், விவசாயிகள் கூடுகளை விற்பனை செய்யவும், பட்டு நூல் உற்பத்தியாளர்கள் கூடுகளை வாங்கவும், பட்டு வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பட்டு விவசாயிகளும், பட்டு நூல் உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அனுமதிச் சீட்டு (Ticket)
இது குறித்து, பட்டு வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பாரூக் கூறுகையில், கோவை விவசாயிகளுக்கு மட்டும், அளவான எண்ணிக்கையில் அனுமதிச் சீட்டுக் கொடுத்து, கூடுகளை அங்காடிக்குக் கொண்டு வந்து, விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
10 டன் விற்பனை (Sale of 10 tons)
இந்த சிறப்பு ஏற்பாடு காரணமாக, தற்போதைய ஊரடங்கு காலத்தில் மட்டும், 10 டன் பட்டுக்கூடு விற்பனையாகி உள்ளது. தரமான கூடு கிலோ, ரூ.350க்கும், அதற்கு அடுத்த தரம் உள்ள கூடு, ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக வரவேற்பு (More welcome)
பட்டுப்புழு வளர்ப்போரின் நஷ்டத்தைப் போக்கும் வகையில் இந்த முறை, முன்கூட்டியே ஏற்பாடு செய்து, விற்பனையைத் தடையின்றி நடத்திய பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு அமோக வரவேற்பும் கிடைத்துள்ளது. பட்டுப்புழு வளர்ப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!
கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!
கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!