1. செய்திகள்

சம்பா பருவத்திற்காக விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Paddy Seed

Credit : Hindu Tamil

சம்பா பருவத்துக்காக 384 டன் விதை நெல் (Paddy seed) சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார்.

ஆய்வு

பவானி குருப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், சம்பா பருவத்துக்காக, 384 டன் விதை நெல் சுத்திகரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி மற்றும் விதை இருப்பு, விதைகளின் நிலைகளை, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார்.

முழு ஊரடங்கு (Full Curfew) அமலில் உள்ள நிலையிலும், எதிர் வரும் சம்பா பருவத்துக்கான நெல் விதை தேவையை கருத்தில் கொண்டு, பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், நெல் விதை சுத்திகரிப்பு பணி நடக்கிறது. அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, தொடர்ந்து இயங்குகிறது.

விதை நெல்

சம்பா பருவத்துக்கான நெல் ரகங்களான ஏ.டி.டி., 38, ஏ.டி.டி., 29, கோ (ஆர்) 50, ஐ.ஆர். 20, பி.பி.டி., 5204, மேம்பட்ட வெள்ளை பொன்னி, சம்பா சப்1, திருச்சி 3 உள்ளிட்ட வயல் மட்ட விதைகள் 384 டன் பெறப்பட்டு, அதில் 301 டன் விதைகளின் சுத்திகரிப்பு பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள வயல் மட்ட விதைகளின் சுத்திகரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

பகுப்பாய்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றுள்ள விதை குவியல்களை தாமதம் இன்றி சான்று அட்டை பொருத்தி, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மாறுதல் செய்யும் பணிகளையும் விரைவுபடுத்த தக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும், வேளாண் பணிகள் தொய்வின்றி நடக்க ஏதுவாக உழவர்களுக்கு தரமான விதைகள் (Quality Seeds) வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறினார்.

மேலும் படிக்க

சூறாவளி காற்று வீசியதால் 250 ஏக்கர் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்தன! இழப்பீடு வேண்டி விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சியில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு

English Summary: Intensity of seed paddy refining work for samba season!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.