Farm Info

Saturday, 27 February 2021 03:54 PM , by: Elavarse Sivakumar

Credit : Kumudham

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடி, 105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாவை நேரில் சந்தித்து பாராட்டினார்.

தமிழகப் பயணம் (Travel to Tamil Nadu)

பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர், அங்கிருந்து புதுச்சேரி சென்றார்.

புதுச்சேரியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கோவை வந்தடைந்தார். இந்த தமிழக பயணத்தின்போது, பிஜேபி தலை­வர்­கள், கூட்­டணி கட்­சித் தலை­வர்­கள், ஆட்­சி­யா­ளர்­கள் என முக்­கிய பெரும்­புள்­ளி­களை மட்­டும் சந்­தித்­து­விட்டு டெல்­லிக்­குத் திரும்பி வி­ட­வில்லை பிர­த­மர் மோடி.

மாறாக, மத்­திய அரசின் பத்­ம­ஸ்ரீ விரு­தைப் பெற்ற பாப்­பம்­மாள் பாட்டி­யை­யும் நேரில் சந்­தித்தார் பிர­த­மர் மோடி.

விவசாயப் பாட்டி (Grandmother of the farmer)

கோவை மாவட்­டம், மேட்­டுப்­பாளை­யம் அரு­கே­யுள்ள தேக்­கம் பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் பாப்­பம்­மாள், இந்த மூதாட்டியின் வயது 105. சுருங்­கிய தோலும் நரை­மு­டி­யு­மாகக் காட்சியளிக்கும் பாப்­பம்­மாள், சிறு வயது முதலே விவ­சா­யத்­தில் மிகுந்த ஆர்­வம் காட்டி வரு­கி­றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி யைச் சந்­திக்க தேர்தல் பிர­சா­ரக் கூட்­டம் நடைபெறும் கோவை கொடி­சியா அரங்­குக்கு வந்திருந்­தார். அங்கு மூதாட்டி பாப்­பம்­மா­ளைச் சந்­தித்த மோடி, அவரை கைகூப்பி வணங்­கி­னார்.

இன்ஸ்­டகி­ரா­மி­ல் பதிவு (Post on Instagram)

பாப்­பம்­மா­ளும் பிர­த­மர் மோடியை வணங்கி அவர் நீண்­ட­நாள் வாழ வேண்­டும் என்று வாழ்த்­தி­னார்.

இதனை தனது இன்ஸ்­டகி­ரா­மி­லும் பதிவு செய்­துள்­ளார்.

கோவை­யில் இயற்கை விவ­சா­யத்­தில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் பாப்­பம்­மாளைச் சந்­தித்­தது மறக்­க­மு­டி­யா­தது, என்று அந்­தப் பதி­வில் பிர­த­மர் குறிப்­பிட்­டுள்­ளார்.அத்­து­டன், இரு­வ­ரும் கைகூப்பி வணங்கும் புகைப்­ப­டத்­தை­யும் பிர­த­மர் தனது ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கிராம் பக்­கங்­களில் பகிர்ந்­துள்­ளார்.

பத்மஸ்ரீ விருது (Padmashree Award)

கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவுப் பொருட் களை உற்பத்தி செய்து, அதை உண்டு ஆரோக்கியத்துடன் வாழும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி அண்மையில் மத்திய அரசு கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....

ஊட்டி உருளைக்கிழங்கு - விலை வீழ்ச்சியின் பிடியில்!

ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!

ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)