1. செய்திகள்

ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Three-phase electricity for farmers from April 1
Credit : Oneindia Tamil

வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணையின் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 565 கோடி ரூபாய்  மதிப்பிலான இந்தத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர் கூறியதாவது:

மேட்டூர் அணை 120 அடியை எட்டியதும் உபரிநீர் டெல்டா பாசனத்திற்கு போக மீதம் கடலில் கலந்து வருகிறது.

தண்ணீர் விநியோகம் (Water Supply)

மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீர் கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்திற்கு முதலில்கொண்டு செல்லப்படும். பின்னர், அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரி துணை நீரேற்று நிலையம், வெள்ளாளபுரம் ஏரி துணை நீரேற்று நிலையம், கண்ணந்தேரி ஏரி துணை நீரேற்று நிலையம் ஆகியவற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இத்திட்டத்தால் மொத்தம் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும. இதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

பொருளாதாரம் உயரும் (The economy will rise)

இதனால் விவசாயம், கால்நடைகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேன்மையடையும். மேலும், மக்களின் பொருளாதார நிலை உயரும்.

மும்முனை மின்சாரம் (Three-phase power)

குறுகிய காலத்தில் மேட்டூர் உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அதிமுக அரசு (ADMK Government)

5 ஆண்டு காலத்தில் 2 முறை விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்த அரசு அதிமுக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு!

பயிரின் வளர்ச்சி ஊக்கிகள் ஏழு வகை!

மாடுகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் பல்மூலிகை மருந்து!

English Summary: Three-phase electricity for farmers from April 1 Published on: 26 February 2021, 12:44 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.