இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 January, 2023 6:29 PM IST
Farming land

எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் தமிழக மக்கள் படும் இன்னல்கள் குறித்து பேசிய உரையை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என மிரட்டப்படுவதாக எதிர்க்கட்சி கொறடா எஸ் பி வேலுமணி சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் இபிஎஸ்

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். இதனையடுத்து இன்றோடு சட்டப்பேரவை நிகழ்வு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களர்களை சந்தித்த எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி தமிழகத்தில் மக்கள் படும் இன்னல்கள் குறித்து இரண்டு மணி நேரம் பேசியதாக தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளான கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியதாக குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கு இழப்பீடு 13ஆயிரமா.?

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி காலதாமதம், திருவாரூர் குடவாசல் கலைக்கல்லூரி இடமாற்றம் பிரச்சனை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்பது குறித்தும் பல்வேறு பிரச்சனைகளை பற்றி பேசியதாக குறிப்பிட்டார். ஆனால் இதனை எந்த ஊடகங்களும் ஒளிபரப்ப வில்லை என்றும் தமிழகத்தில் உள்ள ஊடகங்களை ஆளுங்கட்சி மிரட்டி வருவதாகவும் இதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறினார். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என குரல் கொடுத்து விட்டு தற்போது ஆளுங்கட்சியாக ஆன பின் 13 ஆயிரம் ரூபாய் ஏக்கருக்கு கொடுக்கிறார்கள் என்றும் அதை 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஊடகங்களை மிரட்டும் திமுக

கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவு கடன் வாங்கியதாக குற்றம் சாட்டிய திமுக, தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுக அரசு 20 மாதங்களில் வரைமுறை இல்லாமல் பல்லாயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் விமர்சித்தார்.

மேலும் படிக்க:

குழந்தைகளுக்கான பான் கார்ட், விண்ணப்பிக்க எளிய வழி

பாரம்பரிய நெல் வகைகளில் இத்தனை மருத்துவ குணங்களா?

English Summary: 30 thousand for damage to agricultural land! 13 thousand now?
Published on: 13 January 2023, 06:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now