1. செய்திகள்

குழந்தைகளுக்கான பான் கார்ட், விண்ணப்பிக்க எளிய வழி

T. Vigneshwaran
T. Vigneshwaran
Pan Card For Kids

பான் அட்டை இந்தியாவில் ஒரு மிக முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகின்றது. ஒருவருக்கு 18 வயது ஆனதும், அந்த நபர் வங்கிக் கணக்கைத் திறக்கும் வயது என்பதால் அந்த வயதில் பான் அட்டையை உருவாக்கிக்கொள்வது நல்லது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு நீங்கள் ஒரு ரசீது எண்ணைப் பெறுவீர்கள். அதை உங்கள் குழந்தையின் பான் கார்டு விண்ணப்பத்தின் நிலையை கண்டறிய பயன்படுத்தலாம். பொதுவாக வெற்றிகரமான சரிபார்ப்பைத் தொடர்ந்து 15 நாட்களுக்குள் நீங்கள் வழங்கிய முகவரிக்கு பான் அட்டை வந்து சேரும்.

  • நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.

  • தேவையான விவரங்களை உள்ளிடவும்.

  • சிறார்களுக்கான பான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான கேடகரியைத் தேர்ந்தெடுக்கவும்.

  •  பான் கார்டு பதிவுக் கட்டணமாக ரூபாய் 107 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

தேவையான ஆவணங்கள்

  • குழந்தையின் பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று தேவைப்படும்

  • விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றும் தேவைப்படும்.

  • குழந்தையின் பாதுகாவலர் ஆதார் அட்டை அல்லது ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் ஐடி ஆகியவற்றை அடையாளச் சான்றாக சமர்ப்பிக்கலாம்.

  • ஆதார் அட்டை, தபால் அலுவலக பாஸ்புக், சொத்து பதிவு ஆவணம் அல்லது அசல் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவை முகவரி சான்றாக செயல்படும்.

  • வங்கிக் கணக்கு, டிமேட் கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல், சொத்து வாங்குதல், பத்திரங்களில் முதலீடு செய்தல் மற்றும் அரசு வழங்கும் நிதி வசதிகள் போன்றவற்றுக்கு பான் கார்டு அவசியமாகும். இந்த ஆவணம் சரியான அடையாளச் சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க:

நாட்டு மாடு வளர்ப்பில் இவ்வளவு லாபமா?

பாரம்பரிய நெல் வகைகளில் இத்தனை மருத்துவ குணங்களா?

English Summary: PAN card for kids, easy way to apply Published on: 12 January 2023, 06:11 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.