தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம்: வேளாண் துறை அறிவிப்பு, ரூ. 5 லட்சம் வருமானம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு! விழுப்புரம் விவசாயி அசத்தல், பரவிவரும் பறவை காய்ச்சல்: கோழிப்பண்ணைகளைக் கண்காணிக்க 45 படை நியமிப்பு, ஆவின் பால் விலை உயர்வால் மக்கள் அவதி, பயிர்க் கழிவுகள் மேலாண்மை அனைவரது கூட்டுப் பொறுப்பு: இந்திய வேளாண் அமைச்சர் கருத்து ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
தோட்டக்கலை பயிர்களுக்கு 40% மானியம்: வேளாண் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பினை அதிகரிப்பதற்காகத் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காய்கற்கள், பழப்பயிர்கள், மலர்கள், சுவைதாளித பயிகள், கோக்கோ, முந்திரி பாயிகள் ஆகியவை பயிரிட 40% மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினைப் பெற www.tnhorticultuure.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் பட்டா, நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்தல் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
ரூ. 5 லட்சம் வருமானம் தரும் பாமாயில் பனை மரம் வளர்ப்பு! விழுப்புரம் விவசாயி அசத்தல்!!
விழுப்புரம் அருகே ஒருகோடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சூர்யா கடந்த 15 வருடங்களாகப் பாமாயில் மரச் சாகுபடி செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், செடிகள் வைத்து 5 வருடங்களில் காய்கள் காய்க்க ஆரம்பித்து விடும். பாமாயிலுடன் ஊடுபயிராக வேர்க்கடலை, உளுந்து, திணை ஆகியவற்றை பயிர் செய்யலாம். பாமாயில் மரம் வளர்க்க, எண்ணெய் பனை கன்றுகளை தமிழக அரசு, மானிய விலையில் ஒரு ஹெக்டேருக்கு 143 கன்றுகள் என்ற விகிதத்தில் வழங்குகிறது என்றும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்களை இலவசமாகவும், மானிய விலையில் சொட்டு நீர் பாசனம் செய்ய சலுகைகளும் அரசு வழங்குகிறது.எண்ணெய் சாகுபடி செய்ய குறைவான வேலையாட்கள் மட்டுமே போதுமானது என்றும் கூறியுள்ளார்.
பரவிவரும் பறவை காய்ச்சல்: கோழிப்பண்ணைகளைக் கண்காணிக்க 45 படை நியமிப்பு!
கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளை கண்காணிக்க 45 அதிவிரைவு படை அமைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நச்சுக்கொல்லி மற்றும் உபகரணங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்டத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் விலை உயர்வால் மக்கள் அவதி!
கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. பால் முகவர்களின் கோரிக்கையை ஏற்று, உற்பத்தி விலையை ரூ.32லிருந்து, ரூ.35ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் 41ல் இருந்து 45க்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதே விலையே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்க் கழிவுகள் மேலாண்மை அனைவரது கூட்டுப் பொறுப்பு: இந்திய வேளாண் அமைச்சர் கருத்து!
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் புதுதில்லியில் உள்ள பூசாவில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற, இந்த பயிலரங்கம்-இல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய இந்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நெற்பயிர்களை முறையாக நிர்வகிப்பது மாசுபடுவதைத் தடுப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
சோலார் பம்ப்செட் அமைக்க மானியம்|பழப்பயிர் சாகுபடிக்கு 40% மானியம்