1. தமிழக விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் போட்டி! பரிசுத்தொகை ரூ. 5 லட்சம்!
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அறிவித்துள்ளது. வரிசை நடவு என, அழைக்கப்படும் திருந்திய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் முதல் இடம்பிடிக்கும் விவசாயிக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய ரக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெறும் பயிர் விளைச்சல் போட்டியில் வேர்கடலை விவசாயிகளுக்கு 25 ஆயிரம், 15 ஆயிரம் என இரு பரிசுகளும், உளுந்து சாகுபடி செய்வோருக்கு 15 ஆயிரம், 10 ஆயிரம் என இரு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிகளில் பங்கு பெற அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க: PM Kisan நிதி ரூ.8000 ஆகிறது|மின்மோட்டார் திட்டம்|விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு|வேளாண் நிதிநிலை அறிக்கை|பயணிகளுக்கு இலவச உணவு
2. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ல Tourist Officer பணிக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக மூன்று காலியாக உள்ள நிலையில் இதனைப் பெற தகுதியாக முதுநிலை பட்டப்படிப்பு இருக்கின்றது. இந்த வேலைக்கான சம்பளம் ரூ.56,100 முத்ல 2,05,700 வரையிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 23 வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முழு தகவலை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் பார்க்கலாம்.
3. வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு விவசாயிகள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!
விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவர்களின் வருமானம் உயர்வதற்காகத் தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையினைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினைத் தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரிதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க வேண்டி விவசாயிகளிடன் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ட்ரோன் மானியம்|புதிய கூட்டுறவு நிலையங்கள்|TNAU|FPO Call Center|HDFC|தங்கம் விலை|காய்கறி விலை|வானிலை
4. 74-வது குடியரசு தினவிழா கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது!
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த ஆளுநர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் குடியரசு தின விழா நடைபெறுவது வழக்கம் ஆனால் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய கொடியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முப்படை வீரர்கள், காவல் துறை சிறப்பு படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அணிவகுப்பு நிகழ்ச்சியில், பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றம். அதனை தொடர்ந்து துறை ரீதியான சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் படிக்க: Ration Card: புதிய ரேஷன் கார்டு|நெல் கொள்முதல் நிலையங்கள்|FPO Call Center|பால்பண்ணைத் தொழில்|இ-சந்தை
5. இந்தைய தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறத. டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் அலங்கார ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரம், சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இடம்பெற்றது.
6. அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்!
திருச்செந்தூர் திருக்கோவில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. மொத்தமாக 6 காலிப்பணி இடங்கள் உள்ளன. இதற்கு tiruchendurmurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|மாடு வளர்ப்பு பயிற்சி|100 யூனிட் மின்சாரம்|புதிய மின் கட்டணம்|தங்கத்தின் விலை
7. புதிய கூட்டுறவு நிலையங்கள் திறப்பு!
விதை கிடைப்பதை அதிகரிக்க உதவும் புதிய கூட்டுறவு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பதையும், அதனை மேம்படுத்துவதையும், கரிமப் பொருட்களின் தடயத்தை அதிகரிக்கவும் உதவும் வகையில் தேசிய அளவில் மூன்று கூட்டுறவு நிலையங்களை அமைப்பதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
8. இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
கடந்த சில மாதங்களில் பெட்ரோல் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. அந்த நிலையில் சென்னையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களாகவே இதே விலையில்தான் பெட்ரோல் விற்பனையானது. டீசல் விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் இன்று லிட்டருக்கு ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் - டீசல் விலை உயராததால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: PM Kisan 13வது தவணை|ஆட்டோ வாங்க மானியம்|நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி|TNEB:100 யூனிட் இலவச மின்சாரம்
9. இன்றைய காய்கறி விலை நிலவரம்
திண்டுக்கல் சந்தையில் விற்பனையாகின்ற நிலவரத்தின்படி,
கத்தரிக்காய்: ரூ. 60
சின்னவெங்காயம்: ரூ.70
வெண்டை: ரூ.50
அவரை:ரூ.40
பெரிய வெங்காயம்:ரூ.30
தக்காளி: ரூ.26
பீட்ரூட்: ரூ.40
கேரடி: ரூ.44
உருளை: ரூ.30
முள்ளங்கி:ரூ.20
கொத்தவரை:ரூ.24-க்கும் விற்பனையாகிவருகிறது.
10.வானிலை தகவல்கள்
தென்கிழக்கு வங்கக் கடலில் இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
ஏற்றுமதி, விதை இருப்பு ஆகியவற்றை அதிகரிக்க உதவும் 3 புதிய கூட்டுறவு நிறுவனங்கள்
பருத்தியில் மகசூலை அதிகரிக்க டிப்ஸ்: விவசாய கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்!