துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில் 50 சதவீத மானியம் பெற்று பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
-
மாவட்டத்தில் நீர் ஆதாரம் மற்றும் மழைப்பொழிவு குறைந்து வருவதால் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கத்தில் விவசாயிகள் செயல்பட வேண்டும்.
-
பாசனநீர் ஆதாரங்களை உருவாக்கி நுண்பாசன பாதுகாப்பான குறு வட்டங்களில், குறுகிய ஆழக்கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ. 25,000 வழங்கப்படும்.
-
மேலும், டீசல் பம்புசெட், மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15,000க்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீர் பாசன குழாய் (ஜஎஸ்ஐ சான்று பெற்ற குழாய்கள்) அமைப்பதற்கு 50 சதவீத மானிய தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000க்கு மிகாமலும் வழங்கப்பட உள்ளது.
-
பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவு வதற்கான செலவில் 50% ஒரு கனமீட்டருக்கு ரூ.350க்கு மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40,000க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படுகிறது.
-
மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது விண்ணப் பங்களை அளித்து பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அஞ்சல் துறையில் வேலை: 8, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
ஏடிஎம்மில் ரொக்கப்பணம் செலுத்தினால் இனி கட்டணம் - ICICI வங்கி அறிவிப்பு!
தீபாவளி Special offerல் வட்டி விகிதம் அதிரடிக் குறைப்பு- வீடு,காரு வாங்க அடிக்கிறது யோகம்!