1. செய்திகள்

வீடு,காரு வாங்க அடிக்கிறது யோகம்! தீபாவளி Special offerல் அதிரடி வட்டிக் குறைப்பு

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit : Justdail

மற்ற காலங்களைக் காட்டிலும், பண்டிகைக் காலங்களில் சிறப்பு தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் போது கிடைக்கும் சந்தோஷம் சற்று மாறுபட்டது.

அந்த வகையில், இந்த தீபாவளி தள்ளுபடியில் கார் அல்லது வீடு வாங்கினால் எப்படி இருக்கும் என எண்ணுபவராக நீங்கள்? உங்களுக்காக வட்டி விகிதத்தை அதிரடியாகக் குறைத்து offer அறிவித்திருக்கின்றன சில வங்கிகள்.

அவற்றின் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.

Union Bank of India

யூனியன் வங்கிதான் தற்போது மிகக்குறைந்த வட்டியில் கார் அல்லது கனவு இல்லத்திற்கானக் கடனை அளிக்கிறது. இங்கு வீட்டுக் கடன் வாங்கினால், 6.7% வட்டி. ப்ரோசஸிங் ஃபீஸ் 0.5 சதவீத வட்டி அல்லது அதிகபட்சம் ரூ.15 ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 7.15%

Bank Of India

இந்தியன் வங்கியைப் பொருத்தவரை வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் 6.85%
ப்ரோசஸிங் ஃபீஸ் 0.25 சதவீத வட்டி அல்லது அதிகபட்சம் ரூ.20 ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 7.15%

Central Bank Of India

சென்ட்ரல் வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 6.85%. பிராசஸிங் ஃபீஸ் வாங்கும் மொத்தக் கடனுக்கான 0.25 சதவீத வட்டி அல்லது, அதிகபட்சம் ரூ.20 ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 7.30%

 

Canara Bank

கனரா வங்கி 6.90% வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. பிராசஸிங் ஃபீஸ் வாங்கும் மொத்தக் கடனுக்கான 0.50 சதவித வட்டி அல்லது அதிகபட்சம் ரூ.10ஆயிரம். இந்த வங்கி வழங்கும் அதிகபட்ச வட்டி 8.90%

Punjab & Sind Bank

Punjab and Sindh Bank பண்டிகை சலுகையாக 6.90% வட்டியில் வீட்டுக்கடனை வழங்குகிறது. இங்கு அதிகபட்சமாக 7.25 வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
இந்த வங்கி பிராசஸிங் ஃபீஸ் என்று எந்தத் தொகையையும் வசூலிப்பதில்லை. இந்த வங்கியின் கடன் வாங்குவதன் மூலம் 10 முதல் 15 ஆயிரம் ரூபாயை நாம் சேமிக்கவும் முடிகிறது. இதனை நாம் Bumber Offerராகவும் வைத்துக்கொள்ளலாம்.

பிற வங்கிகளின் வட்டி விகிதம்

SBI                  6.95% - 7.10%

HDFC Bank       6.95% - 7.10%

ICICI Bank        6.95% - 7.60%

PNB                  7.00% - 7.60%

Bank of Baroda 7.25% - 8.25%

மேலும் படிக்க...

விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

English Summary: Deepavali Special Offer Interest Rate Reduction- Yoga to Buy Home, Car!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.