பிஎம் கிசானின் 13வது தவணை புத்தாண்டு தினத்திலோ அல்லது ஆண்டின் முதல் வாரத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் தவணை ஜனவரி 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
எனவே இந்த முறையும் ஜனவரியில், அரசு நிதியை மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. உங்கள் ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. பதிவு செய்ய, விவசாயிகள் தங்களது ரேஷன் கார்டு விவரங்களை பதிவேற்றம் செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2.பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 கீழ் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் உபகரணங்கள் வாங்க 50% மானியம்
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக பனை மேம்பாட்டு இயக்கத்தின் 2022-23 பனையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. ஒரு அலகிற்கு 50 சதவீதம் மானியமாக ரூ, 4,000/- வழங்கப்படுகிறது. விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள், தோட்டக்கலை துறையின் ஆதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இணையதளம்: http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php
3.தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 30, 2022 தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், 18.01 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்களை வழங்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட (Transponders) டிரான்ஸ்பாண்டர்களை, நிலப்பரப்பிலிருந்து படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ள உருவாக்கியுள்ளது. இக்கருவி மூலம் அலைபேசியில் உள்ள செயலி வழியாக (Mobile app) தகவல்களை பெறலாம் என்பது குறிப்பிடதக்கது.
4.மதுரை வேளாண்மைத் துறை சார்பில் 15 இடங்களில் காட்டுப்பன்றி உயிரி விரட்டி சோதனை
காட்டுப்பன்றிகளை விரட்டும் வகையில் உருவாக்கப்பட்ட உயிர் விரட்டியை 15 இடங்களில் சோதனை செய்ய மதுரை வேளாண் துறை முடிவு செய்துள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உயிர் விரட்டி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் இதனைத் தெரிவித்தார். விவசாயிகள், காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதாக புகார் தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நடவடிக்கைகளில் மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திரா, காட்டுப்பன்றிகளை விரட்ட உயிர் விரட்டியை கண்டுபிடித்துள்ளதாகவும் விவேகானந்தர் கூறினார்.
5.தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இனைந்து, ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல் பூங்காவினை அமைக்க உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137.65.0 ஹெக்டர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்க அரசு 28 டிசம்பர் 2022 புதன்கிழமை அன்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இத்திட்டம் 5 ஆண்டுகளில் (2022-2027) செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வழிகாட்டப்பட்ட நடைபயிற்சி, தாவர உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கும் கல்வித்திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள், நடைப்பயிற்சி, படகுசவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளையும் கொண்டிருக்கும், அம்மனிற்கு உரிய உணவு வகைகள் மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் மூலம் உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரம், விவசாயிகள் மற்றும் தொழில்கள் மேம்படும்.
6.விழுப்புரத்தில் இன்டர் மண்டி ராகி வர்த்தகம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மண்டியில் இருந்து விழுப்புரம் டவுன் வரை e-NAM இல் 1வது இன்டர் மண்டி ராகி (விரல் தினை) வர்த்தகம் நடந்தது. இதன் வர்த்தக அளவு 2.03 குவிண்டால் ஆகும். ராகியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்று SFAC இந்தியா தெரிவித்துள்ளது. இதில் பயன்பெற e-NAM இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.
7.புதுக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு விதிமுறைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு , மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் 1 மாதத்திற்கு முன்பாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும். அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும், மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இணையதளம் வாயிலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவரும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சிறப்பிக்கும் படி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.
8.திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் மஞ்சப்பை விருதுகள்
மாவட்ட ஆட்சியர் திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அனைவரையும் 2022-2023 மஞ்சப்பை விருதுகளுக்கு பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை தொடங்க சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக அமைச்சர்கள் சட்டசபையில் முன்பே அறிவித்துள்ளனர் . இந்த விருது சிறந்த பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு வழங்க படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (SUPs) மற்றும் அவர்களின் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக்கி ஊக்குவிக்கவும் பள்ளிகளுக்கு வழங்கப்படும். 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 பேருக்கு இந்த விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் மூன்றாம் பரிசாக வழங்கப்படும். மஞ்சப்பை விருது 2022- 2023 விண்ணப்பப் படிவங்கள் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
9.வானிலை அறிக்கை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை .
மேலும் படிக்க:
நிலத்தில் இருந்து கடலில் உள்ளவர்களுடன் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்
பொங்கல் பரிசில் சேர்க்கப்படுமா முந்திரி? முந்திரி விவசாயிகள் கோரிக்கை