1. செய்திகள்

நிலத்தில் இருந்து கடலில் உள்ளவர்களுடன் எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Transponder Easily communicate with people from land to sea

தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்போண்டர்கள் பொருத்தும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த தொழில்நுட்பம் மூலம் தகவல் பரிமாற்றம், மேலும் எளிதாகும். இதை விரிவான தகவலை பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டிசம்பர் 30, 2022 தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக, நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், 18.01 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்போண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்போண்டர்களை வழங்கினார்.

விசைப்படகுகளில் Transponder தொழில்நுட்பம் குறித்த தகவல்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்போண்டர்களை உருவாக்கியுள்ளது. நிலப்பரப்பிலிருந்து, இந்த டிரான்ஸ்போண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் வாயிலாக இக்கருவியை இணைத்து அலைபேசியில் உள்ள செயலி வழியாக தகவல்களையும் பெறலாம்.

டிரான்ஸ்போண்டர்களை மீன்பிடி விசைப்படகுகில் பொருத்தவதால். மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது, ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும், இதனால் விபத்துகளை தவிர்த்திடலாம். அதேநேரம், இக்கருவின் மூலம் கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ இயலும். அதுமட்டுமின்றி, அதிக மீன்கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும், இதுபோன்ற சேவைகள் மீனவ சமூதாயத்திற்கு பேருதவியாக இருக்கும், என்பதால் இத்திட்டம் செயல்படுகிறது.

மேலும், இக்கருவியின் மூலம் அழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய எளிதாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில் மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந.கௌதமன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் அ.கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர். கே.சு.பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க:

பொங்கல் பரிசில் சேர்க்கப்படுமா முந்திரி? முந்திரி விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் பரிசில் முந்திரி சேர்க்க வலியுறுத்தல்| குறைத்தீர்வு முகாம்| நம்மாழ்வார் நினைவுநாள்| PMKSK

English Summary: Transponder Easily communicate with people from land to sea Published on: 31 December 2022, 02:04 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.