நீர்வடிப்பகுதி மேம்பாடு பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 80% மானியமும்,
ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கு 90% மானியமும் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் மாவட்டங்கள், பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம்,தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர். உழவன் செயலி மூலம் சுலபமாக முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரை அணுகவும்.
2. பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண் காடு அமைக்க 80% நிதி உதவி
நீர்வடிப்பகுதி மேம்பாடு பிரதம மந்திரியின் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ் நீர்வடிப்பகுதி விவசாயிகள் வேளாண் காடு அமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கு 80% மானியம் ஏக்கருக்கு மானியம் ரூ.4800/- வழங்கப்படுகிறது. ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன விவசாயிகளு்கு 90% மானியம் எக்கருக்கு ரூ.5400 வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்: பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர். உழவன் செயலி மூலம் சுலபமாக முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனரை அணுகவும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
3. தமிழகத்தில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்கியது. பிளஸ் 2 பொதுத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என, மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வானது பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது . இன்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . முன்னதாக பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
4. ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் தற்கொலை- மகாராஷ்டிரா அரசு தகவல்
மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி,கடந்த எட்டு ஆண்டுகளில் மொத்தம் 7,444 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியின் கீழ் கடந்த ஏழு மாதங்களில் 1,203 விவசாயிகளும், உத்தவ் தாக்கரே ஆட்சியின் கீழ் இரண்டரை ஆண்டுகளில் 1,660 விவசாயிகளும் இறந்துள்ளனர். 2014 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியின் போது 5,061 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 8 விவசாயிகள் நிதி மற்றும் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்யும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
5. சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது The Elephant Whisperers
தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினரின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் The Elephant Whisperers ஆவணப்படம் படமாக்கப்பட்டிருந்தது. தாயை இழந்த இரண்டு அனாதை குட்டி யானைகளைத் தத்தெடுத்து அவற்றை பராமரிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கும்- யானைக்கும் இருந்த உறவின் உணர்வுகளையும் ஆக்கப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் . இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை The Elephant Whisperers வென்றது. இதைப்போல் RRR படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு படலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
6. அனைத்து பருவங்களுக்கேற்ற புதிய ரக கவுனி நெல் கோ57
வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சகத்தின் அறிவுரையின்படி, அனைத்து பருவங்களுக்கேற்ற புதிய ரக கவுனி நெல் கோ57 அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நெல் அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம், மருத்துவ குணமிக்கது, பாக்டீரியல் இலைக் கருகல், இலையுறைக்கருகல் மற்றும் நெல் பழ நோய் போன்ற நோய்களுக்கும், தண்டு துளைப்பான் மற்றும் இலை சுருட்டுப்புழு போன்ற பூச்சிகளுக்கும் எதிர்ப்புத்திறனுடையது. இதன் மகசூலும் 4,638 கிலோ/ஒரு எக்டர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகுங்கள்.
7. வானிலை அறிக்கை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மார்ச் 14 மற்றும் 15 தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
கரும்பு செட் சிகிச்சை என்பது சிவப்பு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்
தேனீ உங்கள் நண்பன், எப்படி தெரியுமா? விளக்கும் வேளாண் மாணவிகள்