1. விவசாய தகவல்கள்

கரும்பு செட் சிகிச்சை என்பது சிவப்பு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்

Deiva Bindhiya
Deiva Bindhiya
கரும்பு செட் சிகிச்சை என்பது சிவப்பு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த உதவும்
Sugarcane set treatment can help control red rot

கரும்பு செவ்வழுகல் நோய்(கொல்லட்டோடிரிக்கம் ஃபால்கேட்டம்) என்னும் பூசணம் தாக்குவதால் ஏற்படுகிறது. இந்நோய் திடீரென அதிக அளவில் தோன்றி பெரும் சேதத்தை உருவாக்கும். அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரியாமல் கரும்பு முதிரும் போது தெரியும்.

இலையின் நுனிப்பாகம் மஞ்சளாகி தண்டின் உள்ளே சிவப்பு நிறமாகவும் வெண்ணிற படைகளும் தெரியும். தண்டிலுள்ள சர்க்கரை பூசணத்தணால் நொதிக்கப்பட்டு சாராயமாக மாறி நாற்றம் வீசும். இதை கட்டுப்படுத்த கார்பண்டாசிம் மருந்து விதை நேர்த்தி மற்றும் இலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

செவ்வழுகல் நோய்: குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ்

அறிகுறிகள்:

  • இந்நோய் தாக்கப்பட்ட கரும்பின், 3 அல்லது 4வது இலைகள் முதலில் ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும். பின் சோகைகள் கீழிருந்து மேலாகக் காய ஆரம்பிக்கும்.
  • பூசண வித்துக்கள் இலையின் உள்ளே சென்று, நடுநரம்பில் அடர்சிவப்பு நிறப்புள்ளிகளைக் காணலாம். பின்பு இலைகளிளும் தேன்றும்.
  • வெளிப்புற அறிகுறிகள், நோய் தாக்கப்பட்ட 16-21 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும்.
  • கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்பு நிறக் கோடுகளைக் காணலாம். இவற்றிற்கு குறுக்காக வெண்மை நிறப் பகுதிகளையும் காணலாம்.
  • கரும்பு மேல் அழுக்கடைந்த பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும். சில சமயங்களில் கரும்பின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி கரும்பழுப்பு நிற திரவம் வழியும். இதிலிருந்து சாராய நெடி வீசுவதிலிருந்து, இந்நோயினை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது

நோய்க்காரணி:

  • இந்நோய் குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் எனும் பூஞ்சை மூலம் பரவுகிறது. இதன் பழைய பெயர் கோலிடோடிரைகம் பால்கேட்டம் என்பதாகும்.
  • இலைத்தாள், இலைப்பரப்பு பகுதிகளில் காணப்படும் பூஞ்சை தனியாகவோ அல்லது குழுவாகவோ வாஸ்குலார் கற்றைகளுக்கிடையே வரிகளைத் தோற்றுவித்தப்படி இருக்கும். இலை அடர் பழுப்பு நிறத்தில் மூழ்கியவாறு 65-250 மைக்ரான் மீ விட்ட அளவும், 8 செல்கள் அளவு தடித்த சுவரும் கொண்டிருக்கும், ஆஸ்டியோல் சற்று வெளி அமைந்தபடி வட்டவடிவமாக இருக்கும்.

கரும்பு செட் சிகிச்சை:

  • கரணைகளை நேர்த்தி செய்து பின் நடுதல் வேண்டும். இதற்கு எக்டருக்கு 125 கிராம் கார்பன்டாசிம் 50 டபிள்யூ.பி அல்லது 1 கிராம் கார்பன்டாசிம் , பூசணக் கொல்லி மருந்தை 2.5 கிலோ யூரியாவுடன் சேர்த்து 250 லிட்டர் தண்ணீரில் கலந்து கரணைகளை ஐந்து நிமிடம் நனைத்து நடுதல் வேண்டும்.
  • பெவிஸ்டின், பெனோமைல், டாப்ஸின் மற்றும் அரிட்டான் ஏதேனும் 1% பூஞ்சாணக் கொல்லி மருந்தினை 52 செ வெப்பநிலையில் 18 நிமிடங்கள் விதைக்கரணை நேர்த்தி செய்யலாம். இதனால் இக்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன

மேலும் விவரங்களுக்கு:

செல்வி ரா.பிரியங்கா, இளங்கலை வேளாண்
மாணவி மற்றும் முனைவர்.பா.குணா, இணைப் பேராசிரியர், நாளந்தா வேளாண்மைக்கல்லூரி, M.R.பாளையம், திருச்சிராப்பள்ளி. மின்அஞ்சல்: baluguna8789@gmail.com. தொலைபேசி எண் : 9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க:

தேனீ உங்கள் நண்பன், எப்படி தெரியுமா? விளக்கும் வேளாண் மாணவிகள்

இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது

English Summary: Sugarcane set treatment can help control red rot Published on: 09 March 2023, 02:07 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.